/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நெடுஞ்சாலைத்துறையிடம் வனத்துறை கேட்குது; நிபந்தனையால் ரோடு விரிவாக்கப் பணிகள் பாதிப்பு
/
நெடுஞ்சாலைத்துறையிடம் வனத்துறை கேட்குது; நிபந்தனையால் ரோடு விரிவாக்கப் பணிகள் பாதிப்பு
நெடுஞ்சாலைத்துறையிடம் வனத்துறை கேட்குது; நிபந்தனையால் ரோடு விரிவாக்கப் பணிகள் பாதிப்பு
நெடுஞ்சாலைத்துறையிடம் வனத்துறை கேட்குது; நிபந்தனையால் ரோடு விரிவாக்கப் பணிகள் பாதிப்பு
ADDED : மே 18, 2024 04:11 AM
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நகருக்குள் வரும் ஒத்தக்கடை, திருநகர், சிவகங்கை ரோடுகள் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. இவ்வகையில் வில்லாபுரம் வழியாக ரிங்ரோடு மண்டேலா நகர் வரையான ரோடும் விரிவாக்கம் செய்யப்படுகிறது.
இந்த ரோடு அவனியாபுரம் பெரியார் சிலை முதல் விமான நிலையம் வரை 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டுவிட்டது. தெற்குவாசல் முதல் வில்லாபுரம் வரை ரயில்வே பாலம் பகுதியில் அகலப்படுத்த வேண்டியுள்ளது.
இதில் பெருங்குடி முதல் மண்டேலா நகர் வரையான 1.5 கி.மீ., தொலைவு ரோடும் 4 வழிச்சாலையாக மாற்ற வேண்டியுள்ளது. இதற்கான பணிகளை நெடுஞ்சாலைத்துறை துவக்கி விட்டது. முதற்கட்டமாக ரோட்டோரம் உள்ள 127 மரங்களை அகற்ற வேண்டும்.
இதற்காக வருவாய்த்துறை கணக்கில் உள்ள மரங்களை அகற்ற நீண்ட இழுபறிக்கு பின், ஒரு மரத்திற்கு 10 மரங்கள் நடுவது குறித்த நிபந்தனையுடன் தடையின்மை சான்றை பெற்றுவிட்டனர்.
அதேபோல வனத்துறை கணக்கில் மீதியுள்ள மரங்களை அகற்ற தடையின்மை சான்று கிடைக்காமல் இருப்பதால்விரிவாக்க பணிகளை துவக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. வனத்துறையின் நிபந்தனை பண விவகாரமாக இருப்பதால் இந்த சுணக்கம் ஏற்பட்டுஉள்ளது.
ஒரு மரத்திற்கு 10 மரங்கள் வீதம் 67 மரங்களுக்கு 670 மரங்களை நெடுஞ்சாலைத்துறை நடுவர். இவற்றை 3 ஆண்டுகளுக்கு பராமரிக்க ஆகும் செலவாக ரூ.16 லட்சம் வரை செலுத்த வேண்டும் என வனத்துறை நெடுஞ்சாலைத்துறையிடம் தெரிவித்துள்ளது.
இதனை முதலிலேயே தெரிவித்து இருந்தால் விரிவாக்கப்பணி மதிப்பீட்டிலாவது சேர்த்து இருப்பர். இந்தளவு தொகைக்கு எதை வைத்து சரிகட்டுவது எனத் தெரியாமல் நெடுஞ்சாலைத்துறை கையை பிசைந்து கொண்டு இருக்கிறது.
இதேபோல ரோடு பணிகளில் மின்வாரியமும் தங்கள் மின்கம்பங்களை அகற்றுவதற்கு டெபாசிட் செலுத்துவது போன்ற நிபந்தனைகளை வைக்கின்றனர். இத்தனைக்கும் அவற்றை ரோடுகளில் நடும்போது எந்தத் துறையும் நெடுஞ்சாலைத்துறையிடம் அனுமதி பெறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற காரணங்களால் பொதுமக்களுக்கான அரசு பணிகள் செயல்பாட்டுக்கு வருவதற்குள் போதும் போதுமென்றாகி விடுகிறது.

