ADDED : செப் 27, 2026 05:00 PM
அ நிறம் | அளவு
சோழவந்தான்: திருவேடகம் விவேகானந்தா கல்லுாரியில் முன்னாள் மாணவர் சங்க பொதுக்குழு மற்றும் சந்திப்பு நடந்தது.
முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் ஆடிட்டர் சத்திய நாராயணா வரவேற்றார். செயலர் சுவாமி வேதானந்த, குலபதி சுவாமி அத்யாத்மானந்த ஆசி வழங்கினர். கல்லுாரி இயக்குனர் ராஜா வாழ்த்தி பேசினார்.
ஆண்டு செயல்பாடுகள் குறித்து முதல்வர் ஜெயசங்கரும், ஆண்டறிக்கையை முன்னாள் மாணவர் சங்க செயலாளர் தீனதயாளனும், பொருளாளர் பட்டினத்தார் வரவு, செலவு கணக்கையும் சமர்ப்பித்தனர். பேராசிரியர் வடிவேல் ராஜா நன்றி கூறினார். முன்னாள் மாணவர்கள் தாங்கள் பயின்ற துறை பேராசிரியர்கள், மாணவர்களுடன் கலந்துரையாடினர்.
