/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கான்கிரீட் தடுப்புச் சுவர் அமைக்காததால் அபாயம் நெடுஞ்சாலைத்துறை மீது குற்றச்சாட்டு
/
கான்கிரீட் தடுப்புச் சுவர் அமைக்காததால் அபாயம் நெடுஞ்சாலைத்துறை மீது குற்றச்சாட்டு
கான்கிரீட் தடுப்புச் சுவர் அமைக்காததால் அபாயம் நெடுஞ்சாலைத்துறை மீது குற்றச்சாட்டு
கான்கிரீட் தடுப்புச் சுவர் அமைக்காததால் அபாயம் நெடுஞ்சாலைத்துறை மீது குற்றச்சாட்டு
ADDED : ஜன 21, 2025 06:15 AM

கொட்டாம்பட்டி: 'கொட்டாம்பட்டியில்கண்மாய் கரையின் அகலத்தை குறைத்து ரோடு விரிவாக்கம் செய்தபின், கரை அரிப்பை தடுக்க தடுப்புச் சுவர் அமைக்கவில்லை' என நெடுஞ்சாலை துறையினர் மீது குற்றச்சாட்டு எழுந்துஉள்ளது.
கொட்டாம்பட்டியில் ஒன்றியத்திற்கு சொந்தமான பொய் சொல்லா மெய் அய்யன் பிள்ளை கண்மாய் 8 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. சீத்தாமலை, கொட்டாம்பட்டி பகுதிகளில் பெய்யும் மழை நீரால் இக்கண்மாய் நிரம்பும். இதன் அருகே திண்டுக்கல் - காரைக்குடிக்கு தேசிய நெடுஞ்சாலை  செல்கிறது.
தற்போது கொட்டாம்பட்டி - பாண்டாங்குடி பிரிவு வரை 2 கி.மீ.,  துாரத்திற்கு ரோடு விரிவாக்கம் செய்துள்ளனர். இவ் விரிவாக்க பணிக்காக கண்மாய் கரையின் அகலத்தை குறைத்து ரோடை அமைத்துள்ளனர்.
சமூக ஆர்வலர் சரவணன்கூறியதாவது:
கண்மாய் கரையின் அகலத்தை குறைத்து  நெடுஞ்சாலை அமைத்துஉள்ளனர்.  நெடுஞ்சாலையில் இருந்து மழை நீர் கண்மாய்க்குள் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் கரையில் கான்கிரீட் தடுப்புச் சுவர் அமைக்காததால் அரிப்பு ஏற்பட்டு மணல் ரோட்டுக்கு வரத்துவங்கியுள்ளது.
மழைக் காலங்களில் கண்மாய் நிரம்பி கரை உடைந்தால் தண்ணீர் கொட்டாம்பட்டிக்குள் செல்லும் அபாயம்  உள்ளது.இதுபற்றி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தால் மதுரை, சிவகங்கை என அலைகழிக்கின்றனர்.
கரை உடைந்து போக்குவரத்து துண்டிப்பு என மக்கள் பாதிப்பு அடையும் முன் கான்கிரீட் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் என்றார்.
ஒன்றிய அலுவலக அதிகாரிகள் கூறுகையில்,நேரில் ஆய்வு செய்து உரிய  நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

