/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மடீட்சியாவின் 'இன்ட் எக்ஸ்போ' தொழில் கண்காட்சி துவக்கம் ஜூலை 28 வரை நடக்கிறது
/
மடீட்சியாவின் 'இன்ட் எக்ஸ்போ' தொழில் கண்காட்சி துவக்கம் ஜூலை 28 வரை நடக்கிறது
மடீட்சியாவின் 'இன்ட் எக்ஸ்போ' தொழில் கண்காட்சி துவக்கம் ஜூலை 28 வரை நடக்கிறது
மடீட்சியாவின் 'இன்ட் எக்ஸ்போ' தொழில் கண்காட்சி துவக்கம் ஜூலை 28 வரை நடக்கிறது
ADDED : ஜூலை 26, 2025 04:33 AM

மதுரை: மதுரை ரிங் ரோடு ஐடா ஸ்கட்டரில் மடீட்சியா சார்பில் 6வது 'இன்ட் எக்ஸ்போ' தொழில் கண்காட்சி நேற்று துவங்கியது. தலைவர் கோடீஸ்வரன் வரவேற்றார். கண்காட்சியின் நோக்கம், சிறப்பம்சங்கள் குறித்து அதன் தலைவர் செந்திகுமார் எடுத்துரைத்தார்.
அரசின் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் (எம்.எஸ்.எம்.இ.,) துறைச் செயலர் அதுல் ஆனந்த், கண்காட்சியை துவக்கி வைத்து பேசுகையில், ''தமிழகத்தில் 30 லட்சத்திற்கும் மேல் உள்ள எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களில் மூன்றில் ஒரு பங்கு நிறுவனங்களின் தலைவராக பெண்கள் உள்ளனர். மதுரையில் செயல்படும் 300க்கும் மேற்பட்ட 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களின் வளர்ச்சிக்கு இக்கண்காட்சி உதவும்'' என்றார். கலெக்டர் பிரவீன் குமார், விழா மலரை வெளியிட்டு பேசுகையில், ''பெண் தொழில் முனைவோர் அதிகம் கொண்ட மாநிலமான தமிழகம் நாட்டின் குறுந்தொழில் நிறுவனங்கள் பங்களிப்பில், 16 சதவீதத்தை பூர்த்தி செய்கிறது. மாவட்டத்தின் தொழில்துறை வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் 'மாஸ்டர் பிளான்' வடிவமைக்கப்பட்டு வருகிறது'' என்றார்.
கண்காட்சியில் பொறியியல், பிளாஸ்டிக், ரப்பர், பேக்கேஜிங், சி.என்.சி., இயந்திரங்கள், எலக்ட்ரிக், எலக்ட்ரானிக்ஸ் உபகரணங்களின் உற்பத்தியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இக்கண்காட்சியை ஜூலை 28 வரை காலை 10:30 முதல் இரவு 7:30 மணி வரை பார்வையிடலாம். அனுமதி இலவசம். பொறியியல் கல்லுாரி மாணவர்கள் ஜூலை 27, 28ல் மதியம் 2:00 முதல் மாலை 4:00 மணி வரை பார்வையிடலாம்.
'டான்ஸ்டியா' தலைவர் மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கண்காட்சி துணைத் தலைவர்கள் ஜெகபதிராஜன், ராஜமுருகன், முகமது யாசிக் உள்ளிட்ட குழுவினர் செய்துள்ளனர்.