/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்த கலைஞர் நுாற்றாண்டு நுாலகம்; இதுவரை 19.42 லட்சம் பேர் வருகை

ADDED : ஜூலை 16, 2025 01:47 AM

மதுரை : மதுரை கலைஞர் நுாற்றாண்டு நுாலகம் மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதுவரை 19 லட்சத்து 42 ஆயிரம் பேர் நுாலகத்தை பயன்படுத்தியுள்ளதாக முதன்மை நுாலகர் தினேஷ்குமார் தெரிவித்தார்.
இந்நுாலகத்தில் இரண்டாம் ஆண்டு விழா நேற்று நடந்தது. நுாலகத்தின் கையேட்டை பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் அய்யாசாமி வெளியிட்டு பேசியதாவது: கோவை, திருச்சியில் கலைஞர் நுாற்றாண்டு நுாலகம் கட்டப்பட்டு வருகிறது. சேலம், திருநெல்வேலி, கடலுாரில் இதை விட பிரமாண்டமாக கட்டப்பட உள்ளது. தற்போது இங்கு சொந்த நுால்கள் கொண்டு வந்து படிப்போர் வாகன நிறுத்தம், வெளி வளாகத்தில் அமர்ந்து படிக்கும் நிலை உள்ளது. அவர்களின் வசதிக்காக ரூ.10 கோடி மதிப்பில் புதிய கட்டடம் கட்டப்படும். அந்த பணி அடுத்த 10 மாதத்தில் நிறைவடையும் என்றார்.
நுாலக ஆண்டறிக்கையை வெளியிட்டு முதன்மை நுாலகர் தினேஷ்குமார் பேசியதாவது: நுாலகம் தொடங்கியது முதல் இதுவரை 19 லட்சத்து 42 ஆயிரம் பேர் வந்துள்ளனர். முதல் ஆண்டில் 9.51 லட்சம் பேர், 2ம் ஆண்டில் 9.90 லட்சம் பேர் வந்துள்ளனர். 1.2 லட்சம் நுால்கள் இரவல் பெறப்பட்டுள்ளன. 7 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். நுாலகத்தை பயன்படுத்தி 29 பேர் அரசுப் பணியில் தேர்வாகியுள்ளனர் என்றார்.
நிகழ்வில் மின் செயற்பொறியாளர் இரணியன், துணை முதன்மை நுாலகர் சந்தானகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.