/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
புதர் மண்டிய காவிரி கூட்டுக் குடிநீர் தொட்டி
/
புதர் மண்டிய காவிரி கூட்டுக் குடிநீர் தொட்டி
ADDED : ஏப் 28, 2025 06:15 AM

மேலுார்: மேலுார் - - திருவாதவூருக்கு செல்லும் காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட தொட்டியில் புதர் மண்டி கிடப்பதால் மக்களின் ஆரோக்கியம் கேள்விக்குறியாகி வருகிறது.
காவிரி கூட்டுக் குடிநீரை மேலுார் காந்திஜி பூங்கா நீரேற்று நிலையம் மூலம் தாலுகா முழுவதும் வினியோகிக்கின்றனர். இத்திட்ட குழாய்கள் 5க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக திருவாதவூருக்கு தடையின்றி தண்ணீர் கொண்டு செல்கிறது. இதில் பாதிப்பு ஏற்பட்டால் சரி செய்யவும், காற்று அழுத்தத்திற்காகவும் நகராட்சி அலுவலகம் அருகே தொட்டி அமைத்துள்ளனர். இத்தொட்டி பராமரிப்பின்றி புதர் மண்டி கிடக்கிறது.
பொதுமக்கள் கூறியதாவது: தொட்டியின் மூடிகள் உடைந்து, குப்பை நிறைந்து புதர் மண்டி கிடப்பதால் குடிநீர் சுகாதாரமற்று உள்ளது. குடிநீர் வாரியத்திடம் ஊராட்சி நிர்வாகம் ஒரு லிட்டர் தண்ணீரை ரூ.16க்கு வாங்கி சுகாதாரமற்ற குடிநீரை வினியோகித்தால் மக்களின் வரிப்பணம்தான் வீணாகிறது என்றனர்.
குடிநீர் திட்ட அதிகாரிகள் கூறுகையில், ''தொட்டியை சுத்தப்படுத்தி மூடி அமைத்து பாதுகாக்க ஏற்பாடு செய்யப்படும் என்றனர்.