ADDED : ஜூன் 20, 2025 03:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்:முத்துச்சாமி பட்டியில் தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம் பழுதானதால் மக்கள் குடிப்பதற்கு தகுதியற்ற, அதிக கடின தன்மையான தண்ணீரை பயன்படுத்தினர். அதனால் பல விதமான தொற்று நோய்களுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டது. மேலும் குடிநீருக்கு என அதிக தொகை செலவு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம் பழுது நீக்கி மக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டது. பொது மக்கள் தினமலர் நாளிதழுக்கு நன்றி தெரிவித்தனர்.