/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வேகமாய் வற்றி வருது மாரியம்மன் தெப்பக்குளம் வைகை நீரை நிரப்ப தவிக்குது மக்கள் மனம்
/
வேகமாய் வற்றி வருது மாரியம்மன் தெப்பக்குளம் வைகை நீரை நிரப்ப தவிக்குது மக்கள் மனம்
வேகமாய் வற்றி வருது மாரியம்மன் தெப்பக்குளம் வைகை நீரை நிரப்ப தவிக்குது மக்கள் மனம்
வேகமாய் வற்றி வருது மாரியம்மன் தெப்பக்குளம் வைகை நீரை நிரப்ப தவிக்குது மக்கள் மனம்
ADDED : ஜூலை 12, 2025 04:19 AM

மதுரை : மதுரையின் சுற்றுலா தலமாகவும், 'புட் கோர்ட்' ஆகவும் மாறியுள்ள மாரியம்மன் தெப்பக்குளத்தில் தண்ணீர் வற்றி வருகிறது. வைகையில் தண்ணீர் வீணாக செல்லும் நிலையில் அதை தெப்பக்குளத்திற்கு திருப்பிவிட வேண்டும் என மீனாட்சி அம்மன் கோயில் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மதுரையின் பொழுதுபோக்கு இடங்களில் ஒன்றான மாரியம்மன் தெப்பக்குளத்தைச் சுற்றி உணவு ஸ்டால்கள், சிறுவர்கள் விளையாட்டு சாதனங்கள், குதிரை, படகு சவாரி என களைகட்டுகிறது. ஆண்டுமுழுவதும் தண்ணீர் நிரம்பி காணப்படும் தெப்பக்குளம் தற்போது வற்றி வருகிறது. படகுசவாரியும் நிறுத்தப்பட்டுள்ளது.
5 ஆண்டுகளுக்கு முன் தெப்பத்திருவிழா சமயத்தில் வைகை ஆற்றில் இருந்து பம்புசெட் மோட்டார் மூலம் தண்ணீர் நிரப்பப்பட்டது. இதற்கு மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம் கட்டணம் செலுத்தியது. பிறகு தண்ணீர் வற்றி கோடையில் கிரிக்கெட் மைதானமாக மாறிவிடும். இதை தவிர்க்க நிரந்தரமாக தண்ணீர் தேக்க அ.தி.மு.க., ஆட்சியில் முடிவு செய்யப்பட்டது.
மீனாட்சி அம்மன் கோயில் பொற்றாமரைக்குளத்தில் சென்னை ஐ.ஐ.டி., வழிகாட்டுதல்படி நிரந்தரமாக தண்ணீர் தேக்கப்பட்டதுபோல் தெப்பக்குளத்திலும் தண்ணீர் தேக்கப்பட்டது.
இதற்காக ஆழ்வார்புரம் பகுதியில் வைகையில் தடுப்பணை அமைக்கப்பட்டு, பனையூர் கால்வாய் வழியாக தெப்பக்குளத்திற்கு விடப்படும். தற்போது வைகையில் தண்ணீர் வீணாக சென்று கொண்டிருக்கிறது. அதை தெப்பக்குளத்திற்கு திருப்பிவிட்டால் வற்றாமல் இருக்கும். இல்லையெனில் வற்றிவிடும். இதுகுறித்து மாநகராட்சிக்கு கோயில் நிர்வாகம் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.
கோயில் தரப்பில் கேட்டபோது, 'தெப்பக்குளத்திற்கு வைகையில் இருந்து தண்ணீர் விடுவதற்கு முதல்நாள் பனையூர் கால்வாயை திறந்து கழிவுகள் எல்லாம் வடிகட்டப்படும். இரண்டாம் நாள் தடுப்பணை திறக்கப்பட்டு தண்ணீர் விடப்படும். கடந்தாண்டு முதல்நாள் அன்றே தடுப்பணை திறக்கப்பட்டு பனையூர் கால்வாய் வழியாக தண்ணீர் விடப்பட்டதால் தெப்பக்குளம் நாறியது. அதுபோல் இந்தாண்டும் செய்யாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் செயல்பட வேண்டும்' என்றனர்.