
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம் : சாத்தங்குடி ஊராட்சியைச் சேர்ந்தது போல்நாயக்கன்பட்டி கிராமம்.
சாத்தங்குடியில் இருந்து 1.5 கி.மீ., துாரத்தில் உள்ளது. இங்கு அமைக்கப்பட்ட தார் ரோடு சேதமடைந்து மேடு, பள்ளங்களுடன் உள்ளது. சிறிய ரக வாகனங்கள் கூட செல்ல முடியாத அளவிற்கு இருப்பதால் கிராம மக்கள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர். மழை நேரங்களில் பள்ளம் முழுவதும் தண்ணீர் தேங்கி, பள்ளம் மேடு தெரியாததால் நடந்து செல்லவே அச்சப்படுகின்றனர். ஒன்றிய அதிகாரிகள் புதிதாக ரோடு அமைத்து தர சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.