/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தொடர்கிறது குரங்கம்மை கண்காணிப்பு இதுவரை 13 ஆயிரத்து 800 பேரிடம் ஆய்வு
/
தொடர்கிறது குரங்கம்மை கண்காணிப்பு இதுவரை 13 ஆயிரத்து 800 பேரிடம் ஆய்வு
தொடர்கிறது குரங்கம்மை கண்காணிப்பு இதுவரை 13 ஆயிரத்து 800 பேரிடம் ஆய்வு
தொடர்கிறது குரங்கம்மை கண்காணிப்பு இதுவரை 13 ஆயிரத்து 800 பேரிடம் ஆய்வு
ADDED : நவ 05, 2024 05:23 AM
மதுரை: மதுரையில் குரங்கம்மை (எம் பாக்ஸ்) நோய் இருக்கிறதா என மதுரை விமான நிலைய பயணிகளிடம் தொடர்ந்து சோதனை நடத்தப்படுகிறது என மாவட்ட சுகாதார துணை இயக்குநர் குமரகுரு தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: இலங்கை, துபாயில் இருந்து தினமும் சிங்கப்பூரில் இருந்து வாரத்திற்கு மூன்று முறை விமானம் மூலம் பயணிகள் மதுரை வருகின்றனர். தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட குரங்கம்மை இங்கும் பரவுகிறதா என்பதை கண்டறியும் வகையில் ஆக. 17 ல் விமான நிலையத்தில் காய்ச்சல் முகாம் அமைக்கப்பட்டது. இங்குள்ள மூன்று கேமராக்களை பயணிகள் கடந்து செல்லும் போது அவர்களின் இயல்பான உடல் வெப்பநிலையை விட கூடுதலாக இருந்தால் கேமராவில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படும். இதை கட்டுப்பாட்டு அறையில் இருந்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். யாருக்காவது காய்ச்சல் இருந்தால் தனியறையில் வைத்து உடலில் சிவப்பு தடிப்புகள் உள்ளதா என்பதை ஆய்வு செய்கிறோம். இதுவரை 13 ஆயிரத்து 800 பேரை ஆய்வு செய்ததில் யாருக்கும் குரங்கம்மை நோய் அறிகுறி இல்லை.
மதுரையில் நேற்று புதிதாக 24 பேர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 59 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். டெங்கு காய்ச்சல் பதிவாக வில்லை என்றார்.