தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ புதிய தொழில்முனைவோரா கைகொடுக்கும் ‘நீட்ஸ்’ திட்டம்

புதிய தொழில்முனைவோரா கைகொடுக்கும் ‘நீட்ஸ்’ திட்டம்

புதிய தொழில்முனைவோரா கைகொடுக்கும் ‘நீட்ஸ்’ திட்டம்


ADDED : ஆக 30, 2026 06:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 30, 2026 06:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: தொழில் வணிகத்துறை சார்பில் புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (நீட்ஸ்) முதல் தலைமுறை தொழில்முனைவோருக்காக மானியத்துடன் செயல்படுகிறது.

முன்பு பட்டதாரி கல்வித்தகுதியாக இருந்த நிலையில் தற்போது பிளஸ் 2, டிப்ளமோ, ஐ.டி.ஐ., தேர்ச்சி பெற்றவர்களும் உற்பத்தித் தொழில் அல்லது சேவைத் தொழில் துவங்க வாய்ப்பளிக்கிறது. குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் முதலீட்டில் துவங்கினால் 25 சதவீத மானியம். எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக 10 சதவீத மானியம் உண்டு. அதிகபட்சமாக ரூ.75 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். பின்முனை வட்டி மானியமாக 3 சதவீதம் வழங்கப்படும்.

பொதுப்பிரிவு ஆண்கள் திட்ட மதிப்பீட்டில் 10 சதவீதம் சுயமுதலீட்டுடன், 90 சதவீத வங்கிக்கடன் பெறமுடியும். மற்றவர்கள் 5 சதவீத சுயமுதலீடு செய்தால் போதும். அரசு அறிவித்துள்ள எதிர்மறை பட்டியல் நீங்கலாக பிற உற்பத்தி, சேவைத் தொழில்கள் தொடங்க முடியும். நேரடி விவசாயம் மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு இத்திட்டத்தில் அனுமதி இல்லை.

பொதுப்பிரிவு ஆண்கள் 21 – 45 வயதுக்குள் மற்றவர்கள் 55 வயது வரை விண்ணப்பிக்கலாம். குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு இல்லை. தமிழகத்தில் 3 ஆண்டுகளாக வசிப்பவர், இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்துடன் போட்டோ, டி.சி., கல்விச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், அபிடவிட், வாடகை ஒப்பந்த பத்திரம், இடப்பத்திர நகல், கட்டட வரைபடம், அதன் மதிப்பீடு, ஜி.எஸ்.டி., எண், திட்ட அறிக்கையுடன் மதுரை அழகர்கோவில் ரோட்டில் உள்ள மாவட்ட தொழில் மையத்தை அணுகலாம் என பொதுமேலாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us