sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தயாராகிறார் அடுத்த கேப்டன்

/

தயாராகிறார் அடுத்த கேப்டன்

தயாராகிறார் அடுத்த கேப்டன்

தயாராகிறார் அடுத்த கேப்டன்


ADDED : ஜூன் 15, 2025 12:17 AM

Google News

ADDED : ஜூன் 15, 2025 12:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பையன் அப்பாவைப் போலவே இருப்பதில் ஆச்சரியமில்லை; ஆனால் குணத்திலும் அப்பா 'கேப்டன்' விஜயகாந்த் போலவே அச்சு அசலாக இருக்கிறார் சண்முக பாண்டியன். படைத்தலைவன் படம் வெளியாகும் பிஸியான நேரத்திலும் சண்டே ஸ்பெஷலுக்காக பேசுகிறார்.

* பொதுவாக மதுரை கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவில் உங்கள் அப்பாவின் படத்தில் இடம்பெற்ற 'வாராரு... வாராரு... அழகர் வாராரு' பாட்டு தான் ஞாபகம் வரும். நீங்கள் மதுரை சித்திரை திருவிழாவில் கலந்து கொண்டது உண்டா?

சின்ன வயதில் மதுரைக்கு அதிகம் போனதில்லை. இதுவரை சித்திரைத் திருவிழா, ஜல்லிக்கட்டை நேரில் பார்க்கும் வாய்ப்பு அமையவில்லை; நேரில் பார்க்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

* படைத்தலைவன் படத்தில் யானை கூட நடிக்கவேண்டும் என்பதற்காக, எப்படி உங்களைத் தயார்படுத்தினீர்கள்?

அப்படி எதுவும் மெனக்கெடல் இல்லை. முதல் நாள் படப்பிடிப்பில் இயக்குனர் என்னை, யானையுடன் நடிக்க வைத்ததால், பயந்து போனேன். ஆனால் சில காட்சிகளுக்கு பிறகு அந்த பயம் போய் விட்டது. யானைக்கும் எனக்குமான நெருக்கமான காட்சிகள் படத்தில் உள்ளன.

* படத்தில் பானை செய்யும் குடும்பபையனாக நடித்தது பற்றிய அனுபவம்?

படப்பிடிப்பு தளத்தில் பானை செய்கிறவரிடமே கற்றுக் கொண்டேன். இந்த தொழில் ரொம்ப கஷ்டமானதென்பது எனக்கு அப்புறமா தான் தெரிந்தது.

'யானைக்கும் மனிதனுக்குமான உணர்வு' தான் இந்த கதை. நம்பிக்கையைப்பற்றி இந்த படம் பேசும், உண்மை சம்பவத்தை மையப்படுத்தித்தான் இந்த கதை. படத்தோடஇறுதியில் அந்த சம்பவத்தையும் கூறி இருக்கிறோம்.

* நீங்க முறைப்படி சண்டைப்பயிற்சி பெற்றுக்கொண்டு திரைத் துறைக்கு வந்தீர்களா?

எந்த மாஸ்டரிடமும் நான் சண்டைபயிற்சி பெற்றதில்லை, நினைவு தெரிந்து, சின்ன வயதில் அப்பாவுடன் கொஞ்சம் விளையாடி இருக்கிறேன். இந்த படத்தில் மகேஷ்மேத்யூ சண்டைக் காட்சிகளை சிறப்பாக அமைத்துள்ளார்.

*நிறைய பேர் உங்களைப் பற்றி சொல்லும் போது அப்பாவின் கண்கள், சண்டையில் அதே வேகம் என்று சொல்கிறார்களே. இதை எப்படிபார்க்கிறீர்கள்?

பெருமையாகத் தான் பார்க்கிறேன்; இதை ஒரு அழுத்தமாகப் பார்க்கவில்லை. அப்பா இல்லாத இடத்தில்என்னைவிஜயகாந்த் பையன் என்று அடையாளப்படுத்துவதே எனக்கு கிடைத்த பெருமை.

*திரைத்துறைதுறையில உங்களுக்கு நண்பர்கள் இருக்கிறார்களா?

நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள்; ஆனால் திரைத்துறையில் குறைவு. பார்த்திபன் மகன்ராக்கி, ஜெயராம் மகன் காளிதாஸ்-இவர்கள் எல்லாம் என் நண்பர்கள். அடிக்கடி இல்லையென்றாலும், வெளியூர் போனால் எல்லாரும் சேர்ந்து செல்வோம்.

* மிகப்பெரிய வெற்றிப் படமான ரமணாவின் இரண்டாம் பாக அறிவிப்பை நீங்கள் எதிர்பார்த்தீர்களா?

நிச்சயமா இல்லை, அது எனக்கு ஒரு பெரிய சர்ப்ரைஸ்தான். முருகதாஸ் என்னை வைத்து படம் இயக்குவேன் எனக் கூறியது பெருமையா இருக்கிறது. சசிகுமார் இயக்கத்தில் 'குற்றப் பரம்பரை' படமும் பெரிய திட்டமிடலோடு தொடங்க இருக்கிறது.

* எப்படி உங்கள் உடம்பைக் குறைத்தீர்கள்? உணவா இல்லை உடற்பயிற்சியா?

இரண்டுமே எனலாம். அப்பாவுட ன்அமெரிக்கா சென்ற போது நிறையவே எடை கூடி விட்டேன். திரும்ப இந்தியா வந்த பிறகு, உடல் எடை குறைப்பதற்காக 2017 இருந்து 2021 வரை கால அவகாசம் எடுத்து உடற்பயிற்சி செய்தேன். இப்போது முழு உடல் தகுதியுடன் வலிமையாக உணருகிறேன்.

* படத்தில் ஏ.ஐ., தொழில் நுட்பத்தில் விஜயகாந்த் வருவது காட்சிக்காகவைக்கப்பட்டதா?

இந்த படத்தில் ஒரு காட்சியில் அப்பா இருந்தால் நன்றாக இருக்குமென வைத்தோம். நிச்சயம் திணிக்கப்பட்டதாக இருக்காது.

*பெற்றோரிடம் நீங்கள் கற்றுக்கொள்ள நினைக்கிற விஷயங்கள்என்ன?

அம்மாவிடம், ஒரு வீட்டை எப்படி அன்பா பாசமா பார்த்துக்கொள்ளவேண்டும் என்பதையும், அப்பாவிடம் பிறருக்கு உதவி செய்தல், நேரத்திற்கு படப்பிடிப்பிற்கு வருதல் போன்றவையும் கற்றுக் கொள்ள முயல்கிறேன்.

இவ்வாறு கூறினார்.

'மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை என்நோற்றான் கொல் எனும் சொல்' என்ற திருக்குறளை நினைவுப்படுத்துகிறார் சண்முகபாண்டியன்!

-கவி

* நடிகர் சங்க கடன் அடைத்ததில் பெரும் பங்கு விஜயகாந்த்க்கு உண்டு; நடிகர் சங்க பொறுப்புக்கு வர உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா?

இப்போதைக்குஅந்த மாதிரி எண்ணம் ஏதும் இல்லை. ஆனால் அதற்கான வாய்ப்பு வந்தால் நிச்சயம் கடமையை செய்வேன்.








      Dinamalar
      Follow us