/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'ஆட்சி மாற்றத்திற்கான முடிவை மக்கள் எடுத்து விட்டார்கள்'
/
'ஆட்சி மாற்றத்திற்கான முடிவை மக்கள் எடுத்து விட்டார்கள்'
'ஆட்சி மாற்றத்திற்கான முடிவை மக்கள் எடுத்து விட்டார்கள்'
'ஆட்சி மாற்றத்திற்கான முடிவை மக்கள் எடுத்து விட்டார்கள்'
ADDED : செப் 11, 2025 11:29 PM
அவனியாபுரம்: ''தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்திற்கான உறுதியான முடிவை எடுத்து விட்டார்கள்,'' என பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
மதுரை விமான நிலையத்தில் அவர் கூறியதாவது: அ.தி.மு.க., வை பா.ஜ., உடைத்து விட்டதாக துணை முதல்வர் உதயநிதி விமர்சனம் செய்துள்ளார். அ.தி.மு.க., வலுவாகத்தான் உள்ளது. அக்கட்சி பொதுசெயலாளர் பழனிசாமி சென்ற இடமெல்லாம் மக்கள் ஆரவாரமும், ஆதரவும் கொடுத்து வருகின்றனர்.
இதனால் உதயநிதி பொறாமையில் ஏதேதோ கூறுகிறார். அவரது எண்ணத்தை ஆறுதலுக்காக கூறுகிறார்.
அ.தி.மு.க., வை உடைக்க வேண்டிய அவசியம் பா.ஜ., விற்கு கிடையாது. நாங்கள்தான் பழனிசாமியை தலைவராக ஏற்று இருக்கிறோம்.
அ.தி.மு.க.,- ஐ.சி.யூ., வில் இருப்பதாக உதயநிதி கூறியுள்ளார். 2026 தேர்தலுக்குப் பின்பு யார் ஐ.சி.யூ., விற்கு செல்கிறார்கள் என்பது தெரியும்.
அ.தி.மு.க., விலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் உள்துறை அமைச்சரை சந்தித்ததாக கூறி இருக்கிறார். இது குறித்து எனக்கு முழுமையாக தெரியாது.
தி.மு.க., வலுவாக இருக்கிறது என உதயநிதி சொல்வதாகத்தான் அண்ணாமலை கூறியுள்ளார். தி.மு.க., வலுவாக இருப்பதாக அண்ணாமலை தெரிவிக்கவில்லை.
அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி என்ன சொல்கிறாரோ அதுதான் முடிவு. பிளவு என்பது கிடையாது. யாரும் பிளவுப்படுத்த நினைக்க வேண்டாம். தேர்தலுக்கு இன்னும் 8 மாதம் உள்ளது. அப்போது பார்த்துக் கொள்ளலாம். இன்று கூட பன்னீர்செல்வத்திடம் அலைபேசியில் பேசினேன். எங்களது உறவு நன்றாகத்தான் உள்ளது.
முதல்வர் வேட்பாளராக பழனிசாமி இருந்தால் கூட்டணி வெற்றி பெறாது என அ.ம.மு.க., பொதுச் செயலாளர் தினகரன் கூறியுள்ளார்.
எங்கள் கூட்டணியில் இருந்து அவர் வெளியேறுவதற்கு முன்பாக, மத்திய உள்துறை அமைச்சர் யாரை முதலமைச்சராக அறிவிக்கிறாரோ அவரை நாங்கள் ஏற்றுக் கொள்வோம்.
அவருக்கு நாங்கள் பிரசாரம் செய்வோம் என்றார். அதன் பிறகு கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டார். தற்போது இந்த கருத்தை கூறியுள்ளார்.
மக்களிடம் அதிகளவில் மன மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அந்த மன மாற்றம் தான் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும். தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்திற்கான உறுதியான முடிவை எடுத்து விட்டார்கள். அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம் என்றார்.
அன்புமணி நீக்கப்பட்டது உள்கட்சி விவகாரம் பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் பா.ஜ., சார்பில் நயினார் நாகேந்திரன் அஞ்சலி செலுத்தினார். அவர் கூறியதாவது:
பா.ஜ., சார்பில் அனைத்து தலைவர்களுக்கும் மரியாதை செலுத்தி வருகிறோம். அந்த வகையில் இமானுவேல் சேகரனுக்கும் ஆண்டுதோறும் அஞ்சலி செலுத்துகிறோம். அ.தி.மு.க., ஒன்றிணைய தற்போது குரல் வலுத்து வருகிறதே என்ற கேள்விக்கு அஞ்சலி செலுத்த வந்துள்ளோம்.
அரசியல் பேச விரும்பவில்லை என்றார். மேலும் பா.ம.க., வில் அன்புமணி நீக்கப்பட்டது குறித்த கேள்விக்கு அது அவர்களின் உள் கட்சி பிரச்னை என தெரிவித்தார்.