/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இர ண்டே மாதத்தில் இடிந்த சுற்றுச்சுவர்
/
இர ண்டே மாதத்தில் இடிந்த சுற்றுச்சுவர்
ADDED : அக் 21, 2025 03:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: டி.கல்லுப்பட்டி பேரூராட்சியில் உள்ள அழகு நாச்சி ஊருணி, மூப்பன் ஊருணிகள் கட்டி இரண்டு மாதங்களில் சுற்றுச்சுவர்கள் இடிந்து விழுந்தது.
இந்த ஊருணி மத்திய அரசின் அம்ரூட் திட்டத்தின் மூலம் ரூ.80 லட்சம் மதிப்பில் துார்வாரி சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. இரண்டு மாதங்கள் ஆன நிலையில் இரண்டு ஊருணிகளிலும் திடீரென சுற்றுச்சுவர் ஒரு பகுதி முழுவதுமாக சாய்ந்தது. மற்ற இரண்டு சுவர்கள் இடியும் நிலையில் உள்ளன. இதனால் ரூ.80 லட்சம் மத்திய அரசின் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. சுவர் இடிந்ததை முன்னாள் அமைச்சர் உதயகுமார், முன்னாள் பேரூராட்சி தலைவர் மாணிக்கம் பார்வையிட்டனர்.