/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பள்ளியை அச்சுறுத்தும் சுற்றுச்சுவர்
/
பள்ளியை அச்சுறுத்தும் சுற்றுச்சுவர்
ADDED : அக் 27, 2025 03:50 AM
அலங்காநல்லுார், அக். 27- மதுரை சத்திரப்பட்டி அருகே காஞ்சரம் பேட்டையில் அரசு நடுநிலைப்பள்ளி சுற்றுச் சுவர் சேதமடைந்து மாணவருக்கு அச்சுறுத்தலாக உள்ளது.
மேற்கு ஒன்றியம் பெரியபட்டி ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளி வளாகத்தில் 1969 களில் கட்டபட்ட தெற்கு, மேற்கு பகுதிகளில் உள்ள பழமையான கட்டடங்கள் ரூ.பல லட்சம் மதிப்பில் மராமத்து செய்யப்பட்டுள்ளது.
பழுதடைந்த அங்கன்வாடி மையம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. அண்டமான் பட்டி ரோட்டில் பள்ளிக்கு சுற்றுச்சுவர்கள் இல்லை. இவ்வழியாக வரும் சமூக விரோதிகள் பள்ளிக்குள் முகாமிடுகின்றனர். நுழைவுப் பகுதி சுற்றுச்சுவர் மற்றும் 'கேட்' 'பில்லர்கள்' விரிசல் விட்டும், பூச்சுக்கள் பெயர்ந்தும் அச்சுறுத்துகின்றன.
சுவர் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.மாவட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

