/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குன்றத்தில் வேல் வாங்கும் விழா இன்று சூரசம்ஹார லீலை
/
குன்றத்தில் வேல் வாங்கும் விழா இன்று சூரசம்ஹார லீலை
குன்றத்தில் வேல் வாங்கும் விழா இன்று சூரசம்ஹார லீலை
குன்றத்தில் வேல் வாங்கும் விழா இன்று சூரசம்ஹார லீலை
ADDED : அக் 27, 2025 03:19 AM
திருப்பரங்குன்றம்: -: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று (அக். 27) நடைபெறும் சூரசம்ஹார லீலைக்காக கோவர்த்தனாம்பிகை அம்பாளிடம் சுப்பிரமணிய சுவாமி வேல் வாங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
கோயில் கம்பத்தடி மண்டபத்தில் நேற்று மாலை சத்யகிரீஸ்வரர், கோவர்த்தனாம்பிகை அம்பாளுடன் சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளினார்.
மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்கை அம்மன், சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள், கோவர்த்தனாம்பிகை அம்பாளுக்கு பூஜை, தீபாராதனை நடந்தது. கோவர்த்தனாம்பிகை அம்பாளிடமிருந்த நவரத்தின வேல் சகல விருதுகளுடன் பெறப்பட்டு நந்தியை வலம் சென்று கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளியிருந்த சுப்பிரமணிய சுவாமியின் கரத்தில் சேர்ப்பிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது.
இன்று சூரசம்ஹாரம் இன்று மாலை 5:00 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி சம்ஹார அலங்காரத்தில் தங்கமயில் வாகனத்திலும், வீரபாகு தேவர் வெள்ளை குதிரை வாகனத்திலும் சொக்கநாதர் கோயில் முன்பு சூரபத்மனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடக்கும்.
கந்த சஷ்டி விரதம் மேற்கொண்டுள்ள பக்தர்கள் நாளை விரதத்தை முடித்துக் கொள்வர். அதற்கு முன்னதாக திருவிழாவின் ஐந்தாம் நாளான இன்று மாவு விரதம் மேற்கொள்வது வழக்கம். இதற்காக பக்தர்கள் நேற்று பச்சரிசியில் மாவு இடித்து அதில் வெல்லம், சுக்கு, ஏலக்காய் சேர்த்து மாவு தயார் செய்தனர்.

