/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தட்டுப்பாடால் கூடுதல் விலைக்கு விற்கும் யூரியா பேரையூர் விவசாயிகள் கவலை

ADDED : அக் 27, 2025 03:19 AM
பேரையூர்: பேரையூர் பகுதியில் தட்டுப்பாடு காரணமாக உர வியாபாரிகள் கூடுதல் விலைக்கு யூரியாவை விற்பதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
பேரையூர் பகுதியில் கடந்த வாரம் தொடர் மழை பெய்தது. நிலத்தில் நல்ல ஈரப்பதம் இருப்பதால் விவசாயிகள் நெல் நடவு பணிகளை துவக்கி உள்ளனர். மானாவாரி நிலங்களில் மக்காச்சோளம், பருத்தி, பாசி, உளுந்து, சோளம், கம்பு, குதிரைவாலி உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்துள்ளனர்.
இதற்கு யூரியா உள்ளிட்ட உரங்கள் தேவைப் படுவதால் விவசாயிகள் உரக்கடைக்குச் சென்று யூரியா உரம் கேட்டால் கிடைப்பதில்லை. சில கடைகளில் ரூ.280க்கு விற்க வேண்டிய ஒரு மூடை யூரியாவை, ரூ.400க்கு விற்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது: போதிய யூரியா கிடைப்பதில்லை. ஒரு கடைக்கு 50 மூடைகள்தான் ஒதுக்கீடு செய்கின்றனர். தற்போது நடவு பணிகள் துவங்கியதால் அதிகளவு யூரியா உரம் தேவைப்படுகிறது. ஆனால் பல கட்டுப்பாடுகளை விதித்து கடைகளுக்கு குறைந்த அளவில் யூரியாவை ஒதுக்குவதால் விவசாயிகளுக்கு போதுமான அளவு வினியோகம் செய்ய முடியவில்லை என்றனர்.
தேவையான நேரத்தில் யூரியா உட்பட உரங்கள் தட்டுப்பாடு இன்றி கிடைக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.