ADDED : ஜன 14, 2025 05:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை காளவாசல் மேம்பாலத்தில் துாண்களுக்கு இடையேயான இணைப்பு பகுதியில் உள்ள இரும்பு தகடுகளால் வாகனங்களின் டயர்கள் சேதமடைகின்றன.
பாலத்தில் இணைப்பு பகுதிகளில் இரும்பு பட்டைகள் உள்ளன. பாலத்தின் நடுப்பகுதியில், கிழக்கு பகுதி ரோட்டில் கான்கிரீட் பெயர்ந்து போனதால், இரும்பு பட்டைகள் வெளியில் தெரிகின்றன. வாகனங்களின் டயர் அவற்றை உரசிச் செல்கையில் அவை 'தட தட'க்கின்றன. இரும்பு தகடுகள் என்பதால் டயர்கள் சேதமடைய அதிக வாய்ப்புகள் உள்ளன. இதேபோல மேலும் சில தகடுகள் சேதமடையும் நிலையில் உள்ளன. நெடுஞ்சாலைத் துறையினரின் பராமரிப்பு போதுமானதாக இல்லாததே இதற்கு காரணம். இதனை ஆரம்ப நிலையிலேயே சரிசெய்யாவிடில் விபத்து அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது.