/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'கோயில்களில் நாதஸ்வர கலைஞர்கள் பணியிடம் விரைவில் நிரப்பப்படும்'
/
'கோயில்களில் நாதஸ்வர கலைஞர்கள் பணியிடம் விரைவில் நிரப்பப்படும்'
'கோயில்களில் நாதஸ்வர கலைஞர்கள் பணியிடம் விரைவில் நிரப்பப்படும்'
'கோயில்களில் நாதஸ்வர கலைஞர்கள் பணியிடம் விரைவில் நிரப்பப்படும்'
ADDED : ஜூன் 04, 2025 01:25 AM
மதுரை: 'கோவில்களில் தவில், நாதஸ்வர கலைஞர்கள் காலிப்பணியிடம் விரைவில் நிரப்பப்படும்' என்று, இயல், இசை, நாடக மன்ற தலைவர் வாகை சந்திரசேகர் கூறினார்.
மதுரையில் மேற்கண்ட அமைப்புடன், நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியம் இணைந்து, நாட்டுப்புற கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. வாரியத் தலைவர் வாகை சந்திரசேகர் தலைமை வகித்தார். நாட்டுப்புற கலைஞர்கள், 147 பேருக்கு ரூ.9 லட்சம் மதிப்பில் காசோலைகளை வழங்கினார்.
பின்னர் அவர் கூறியதாவது: அ.தி.மு.க., ஆட்சியில் குறைவான நிதியே நலவாரியத்துக்கு ஒதுக்கினர். ஆனால் தி.மு.க., ஆட்சியில் நிதி அள்ளிக் கொடுக்கப்பட்டுள்ளது. நலவாரியத்தில் 30 ஆயிரம் கலைஞர்கள் பதிவுசெய்திருந்தனர். தற்போது இந்த எண்ணிக்கை 58 ஆயிரமாக உயர்ந்துள்ளது. உறுப்பினர் சேர்க்கையை மேலும் அதிகரிக்க உள்ளோம்.
அதற்கான இடையூறுகளை களைந்து, எளிமைப்படுத்தி, விரைவில் எண்ணிக்கையை 1 லட்சமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வாரியத்தில் ஓய்வூதியம் கேட்டு 2 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. அதில் தகுதியான விண்ணப்பத்தாரருக்கு ஓய்வூதியம் வழங்க உள்ளோம்.
அறநிலையத்துறை கோவில்களில் தவில், நாதஸ்வர கலைஞர்கள் காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்றார். நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ. அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.