/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பேரையூர் மண்ணெடுத்து சேர்த்து செய்யும் பானைகள்
/
பேரையூர் மண்ணெடுத்து சேர்த்து செய்யும் பானைகள்
ADDED : மார் 02, 2024 04:11 AM
பேரையூர், : இயற்கை முறையில் கோடையை சமாளிக்க மண் பானைகளின் தேவை இந்தாண்டு அதிகரிக்கக்கூடும் என்பதால் பேரையூர்அருகே சிலைமலைப்பட்டியில் மண்பானை தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொதுவாக பொங்கல் பானைகள் தயாரிக்கும் போதே, கோடைக்கு தேவையான பானைகள் தயாரிப்பதை மண்பானை தொழிலாளர்கள் வழக்கமாக கொண்டிருந்தனர். தற்போது பானைகளின் தேவை அதிகரிப்பதற்கான சூழல் நிலவுவதால் பானை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பானை தயாரிப்பாளர்கள் கூறியதாவது:
தற்போது பானை அதிகஅளவில் விற்பனையாகிறது. இங்கு செய்யப்படும் மண்பானைகளை சிவகாசி, விருதுநகர், கோவில்பட்டி உள்ளிட்ட இடங்களிலிருந்து வியாபாரிகள் ஒரு பானை ரூ.175க்கு மொத்தமாக வாங்கிச்செல்கின்றனர். கோடை ஆரம்பித்துள்ளதால் இன்னும் விலை கூட வாய்ப்புள்ளது என்றனர்.

