ADDED : ஜன 29, 2024 05:55 AM

பேரையூர்: தொடர் மழையால் வைக்கோலுக்கு விலை கிடைக்காததால் பேரையூர் பகுதி விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
பேரையூர் தாலுகாவில் கடந்த மாதம் பெய்த தொடர் மழை காரணமாக நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது. நெல்மணிகள் நீரில் மூழ்கி முளைக்கத் தொடங்கின.
விவசாயிகள் நெல் கதிர்களை அறுக்காமல் வயலிலேயே விட்டுவிட்டனர். தற்போது நிலத்தில் நீர் வடிந்துவிட்டது. நெல்மணிகள் வீணாகிவிட்டது.கடந்தாண்டு ஒரு ஏக்கரில் உள்ள வைக்கோல் ரூ.15 ஆயிரத்துக்கு மேல் விற்பனையானது. தற்போது விவசாயிகள் வைகோலையாவது விற்பனை செய்யலாம் என நினைத்து அதை கட்டுகளாக கட்டி வைத்துஉள்ளனர். தொடர் மழை காரணமாக பசுந்தீவனம் கிடைப்பதால் கால்நடை விவசாயிகள் வைக்கோல் வாங்க ஆர்வம் காட்டவில்லை. இதனால் ஒரு ஏக்கர் வைக்கோலை ரூ.3000-க்கு கூட வாங்குவதற்கு ஆள் வரவில்லை என விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.