/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நெடுங்குளத்தில் கொள்முதல் மையம் நெல் விவசாயிகள் எதிர்பார்ப்பு
/
நெடுங்குளத்தில் கொள்முதல் மையம் நெல் விவசாயிகள் எதிர்பார்ப்பு
நெடுங்குளத்தில் கொள்முதல் மையம் நெல் விவசாயிகள் எதிர்பார்ப்பு
நெடுங்குளத்தில் கொள்முதல் மையம் நெல் விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : பிப் 15, 2024 05:52 AM
மதுரை: நெடுங்குளத்தில் மார்ச் முதல் வாரத்தில் நெல் அறுவடை துவங்கி விடும் என்பதால் மாவட்ட நிர்வாகம் நெல் கொள்முதல் மையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவர்கள் கூறியதாவது: நெடுங்குளத்தில் 300 ஏக்கர், ஆலங்கொட்டாரம், ரிஷபம், திருமால் நத்தம், தச்சம்பத்து, திருவேடகத்தில் 350 என மொத்தம் 650 ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. கடந்தாண்டு 19 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்த நிலையில் தற்போது 650 ஏக்கரில் 30 ஆயிரம் டன் நெல் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
மார்ச் முதல் வாரத்திற்கு மேல் அறுவடை துவங்க உள்ளது. ஒரு கிலோ நெல்லுக்கு ரூ. 23 வீதம் 40 கிலோ மூடைக்கு ரூ.920 வீதம் அரசு வழங்குகிறது. வியாபாரிகளுடன் ஒப்பிடும் போது ஒரு மூடைக்கு ரூ.200 கூடுதல் லாபம் கிடைக்கிறது. நெல் கொள்முதல் மையத்தை தாமதப்படுத்தினால், விவசாயிகள் வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு நெல் விற்க நேரிடும். நெடுங்குளத்தில் நெல் கொள்முதல் மையம் அமைக்க அனுமதி வழங்கினால், சாக்குகள் வாங்குவது, இயந்திரங்கள் வரவழைப்பது, ஆட்களை நியமிப்பது என இந்த நடைமுறைக்கு ஒரு மாதம் தேவைப்படும்.
எனவே தாமதமின்றி கொள்முதல் மையம் அமைக்க உத்தரவிட வேண்டும் என்றனர்.

