/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
போராட்டங்கள் வலுப்பதே தி.மு.க., அரசுக்கான எதிர்ப்புதான் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., கணிப்பு

ADDED : டிச 19, 2024 05:11 AM
திருப்பரங்குன்றம்: ''தி.மு.க., அரசுக்கு அனைத்து தரப்பு மக்களின் எதிர்ப்பும், போராட்டங்களும் வலுக்கிறது'' என அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா கூறினார்.
அவர் கூறியதாவது:
2026 தேர்தல் களத்திற்கு அ.தி.மு.க., தயாராகிவிட்டது. தேர்தலில் அனைவரும் எதிர்பார்க்கும் வகையில் அ.தி.மு.க., தலைமையில் வெற்றிக் கூட்டணி அமையும். தி.மு.க., ஆட்சிக்கு எதிர்ப்பு தமிழக முழுவதும் பரவி வருகிறது. இந்த ஆட்சிக்கு எதிராக மக்கள், அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்துகின்றனர்.
போராட்டம், ஆர்ப்பாட்டம் இல்லாத நாட்களே இல்லை என்றாகி விட்டது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கும் சீர்கெட்டு விட்டது. அனைத்து பொருள்களின் விலையும், அனைத்து வரிகளும் உயர்ந்து விட்டன.இதுவே அ.தி.மு.க., கூட்டணிக்கு வெற்றியை பெற்றுத் தரும்.
தேர்தல் ஆணையமும்,உச்ச நீதிமன்றமும், அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி, அவரது தலைமையிலான அ.தி.மு.க.,வுக்கே இரட்டை இலை என உறுதிப்படுத்தி விட்டன. யார் வேண்டுமானாலும் வழக்குப் போடலாம் என்றால் எந்த கட்சியும் முழுமையாக இயங்க முடியாது.
திருப்பரங்குன்றம் மலையில் ரோப் கார் அமைக்க ரூ. 13 கோடி மதிப்பீடு போடப்பட்டுஉள்ளது. ஆனால் ரூ.5.60 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூடுதல் நிதியை கேட்டு பெறும் நிலை உள்ளது. நிதி கிடைத்தால்தான் பணிகள் துவங்க ஏதுவாக இருக்கும். திட்டத்திற்கு முழுத் தொகையும் ஏன் ஒதுக்கவில்லை என்றார்.