/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அதிர வைத்த அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு: பரிசு மழை கொட்டியதால் காளைகள், காளையர் உற்சாகம்
/
அதிர வைத்த அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு: பரிசு மழை கொட்டியதால் காளைகள், காளையர் உற்சாகம்
அதிர வைத்த அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு: பரிசு மழை கொட்டியதால் காளைகள், காளையர் உற்சாகம்
அதிர வைத்த அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு: பரிசு மழை கொட்டியதால் காளைகள், காளையர் உற்சாகம்
UPDATED : ஜன 17, 2025 07:01 AM
ADDED : ஜன 17, 2025 12:10 AM

உலகப்புகழ் பெற்ற மதுரை, அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு போட்டி இந்தாண்டு வழக்கமான உற்சாகத்துடன் நேற்று காலை, 8:15 மணிக்கு துவங்கியது. கலெக்டர் சங்கீதா முன்னிலையில் வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
துணை முதல்வர் உதயநிதி கொடியசைத்து துவக்கி வைத்தார். அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன், தேனி தங்கதமிழ்செல்வன் எம்.பி., முன்னிலை வகித்தனர்.
கிராம கமிட்டி சார்பில் முனியாண்டி, அரியமலை, வலசை கருப்பசாமி கோவில்களை சேர்ந்த மூன்று காளைகளுக்கு முதல் மரியாதை செலுத்தப்பட்ட பின் காளைகள் அவிழ்க்கப்பட்டன. ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு கலர் சீருடையில், தலா 50 வீரர்கள் களம் இறக்கப்பட்டனர்.
வாடிவாசலில் சீறிப்பாய்ந்த காளைகளை ரவுண்டு கட்டி வீரர்கள் விரட்டி பிடித்தனர். தில் காட்டிய காளைகள் வீரர்களை முட்டித் துாக்கிஎறிந்து பறக்க விட்டன.
வெற்றி பெற்ற வீரர்கள், காளை உரிமையாளர்களுக்கு தங்கக்காசு, தங்க மோதிரம், சைக்கிள், அண்டா, மெத்தை உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.
போட்டியில் 20 காளைகளை அடக்கிய அபி சித்தருக்கு முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது. சேலத்தைச் சேர்ந்த காளை உரிமையாளர் மோகன் என்பவருக்கு முதல் பரிசாக டிராக்டர் வழங்கப்பட்டது.
பதிவு செய்யப்பட்ட 1,000 காளைகளில், 10 சுற்றுகளில் 989 காளைகள் அவிழ்க்கப்பட்டன. வீரர்கள், பார்வையாளர்கள் 72 பேர் மாடுகள் முட்டி காயமடைந்தனர். 11 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
போட்டியில் காளைகள் சேகரிக்கும் பகுதியில் அதே பகுதியைச் சேர்ந்த பெரியசாமி, 66, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது, அவரை மாடு ஒன்று முட்டியதில் பலத்த காயமடைந்தார். சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் உயிரிழந்தார்.
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் செல்லுார் ராஜு, விஜயபாஸ்கர், நடிகர் சூரி, இலங்கை கிழக்கு மாகாண முன்னாள் கவர்னர் செந்தில் தொண்டைமான் ஆகியோரின் காளைகள் வெற்றி பெற்றன.தென்மண்டல ஐ.ஜி., பிரேமானந்த சின்ஹா தலைமையில் 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.