/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'கலவர வழக்கை திரும்ப பெற வேண்டும்'
/
'கலவர வழக்கை திரும்ப பெற வேண்டும்'
ADDED : பிப் 11, 2024 12:59 AM
ஓசூர்: ''ஆம்பூர் கலவர வழக்குகளை மனிதாபிமான அடிப்படையில் தமிழக முதல்வர் திரும்ப பெற பரிசீலிக்க வேண்டும்'' என மனித நேய ஜனநாயக கட்சி மாநில தலைவர் தமிமுன் அன்சாரி கூறினார்.
ஓசூரில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
இரு ஆண்டுகளாக தி.மு.க. அரசிடம் ஜாதி மத வழக்கு பேதமின்றி 20 ஆண்டுகளை கடந்த சிறை கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தோம். தமிழக மக்களின் உணர்வுகளை கருத்தில் கொண்டு கவர்னர் முதற்கட்டமாக 12 பேரை விடுதலை செய்ய ஆணை பிறப்பித்துள்ளார்.
இதற்கு நடவடிக்கை எடுத்த முதல்வர் ஸ்டாலின்சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த எதிர்க்கட்சி தலைவர்பழனிசாமி மற்றும் ஆணை பிறப்பித்த கவர்னர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.
கடந்த 2015ல் ஆம்பூரில் நடந்த கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்குகளை மனிதாபிமான அடிப்படையில் முதல்வர் திரும்ப பெற பரிசீலிக்க வேண்டும். பார்லிமென்ட் தேர்தலுக்கு முன்பு நாட்டில் என்னென்ன நடக்க போகிறது என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
பொது சிவில் சட்டத்தை ஏற்று கொள்ள முடியாது. பார்லிமென்ட் தேர்தலில் எங்கள் நிலைப்பாட்டை பொறுத்தவரை தேர்தல் ஆணையம் தேர்தல் தேதி அறிவித்த பின்பு தலைமை நிர்வாக குழு முடிவு செய்யும்.
இவ்வாறு கூறினார்.