ADDED : பிப் 15, 2024 05:54 AM
திருமங்கலம்: திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம் வடகரை ஊராட்சி ஒன்றியம் பாண்டிய நகர் பகுதியில் உள்ள தெருவில் 15வது நிதி குழு ஒதுக்கீட்டில் ரூ. 8 லட்சம் மதிப்பீட்டில் சாக்கடை கட்டப்படுகிறது.
அந்த தெருவின் ஒரு முனையில் இருந்து மறுமுனை வரை முழுமையாக சாக்கடை கட்டினால் அருகில் உள்ள தெருவில் உள்ள வீடுகளில் தேங்கியுள்ள கழிவு நீரும் அந்த சாக்கடை வழியாக வெளியேறும் வசதி உள்ளது. ஆனால் நிதி போதிய அளவு ஒதுக்கப்படவில்லை எனக்கூறி 10 மீட்டர் அளவுக்கு பற்றாக்குறையாக சாக்கடை அமைப்பதால் அந்த தெருவின் ஒரு பகுதியில் சாக்கடை நீர் வெளியேறும். மற்றொரு பகுதியில் வெளியேறாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் நோய் தொற்று, கொசு உற்பத்தி போன்றவை ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே முழுமையாக நிதி ஒதுக்கீடு செய்து சாக்கடையை முழுமையாக கட்டித் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

