ADDED : ஜூலை 05, 2026 02:07 AM

அ நிறம் | அளவு
பேரையூர்: பேரையூர் தாலுகா டி.கல்லுப்பட்டி யூனியன் வன்னிவேலம்பட்டி ஊராட்சியில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ரூ.10 லட்சம் செலவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது.
இங்கு ஒரு குடம் குடிநீர் ரூ.2க்கு வினியோகிக்கப்பட்டது. ஒரு மாதம் செயல்பட்ட இந்நிலையம் பழுதடைந்ததால் மூடப்பட்டது.
அதன்பின் திறக்கப்படவில்லை. இங்கு விநியோகித்த வைகை கூட்டுக் குடிநீர் திட்டமும் கடந்த ஒரு மாதமாக செயல்படவில்லை.
இதனால் இப்பகுதி மக்கள் குடிநீருக்கு சிரமப்படுகின்றனர். சுத்திகரிப்பு நிலையத்தை சரி செய்து உடனே பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
