ADDED : ஜூலை 05, 2026 02:08 AM

நாகமலை: நாகமலைப் புதுக்கோட்டை வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரியின் 38வது பட்டமளிப்பு விழா, நாடார் மகாஜன சங்க பொதுச் செயலாளர் கரிக்கோல்ராஜ் முன்னிலையில் நடந்தது.
கல்லுாரி முதல்வர் பாலமுருகன் வரவேற்றார். செயலாளர் சுந்தர் விழாவை தொடங்கி வைத்தார். மாணவர்களுக்கு பட்டம் வழங்கி உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் பேசியதாவது:
மனிதர்களின் 3வது கண்ணாகிய கல்வியை யாராலும் அழிக்க முடியாது. தமிழகத்தின் கடைக்கோடி மக்களுக்கும் கல்வியறிவு கிடைக்க வேண்டும் என பெருந்தலைவர் காமராஜர் வலியுறுத்தினார்.
அவர் தொடங்கி வைத்த இக் கல்லுாரியில் பட்டம் பெறும் மாணவர்கள், பேராசிரியர்களை வாழ்நாள் முழுவதும் நினைக்க வேண்டும். புத்தகங்களை நேசிக்க வேண்டும் என்றார்.
இளங்கலை, முதுகலையை சேர்ந்த 474 மாணவர்கள், 266 மாணவிகள் என 740 பேர் பட்டம் பெற்றனர். கல்லுாரிக் கல்வி இயக்கக மண்டல இணை இயக்குநர் கலைச்செல்வி, கல்லுாரி தலைவர் கோடீஸ்வரன், துணைத் தலைவர் பாண்டியன், இணைச் செயலாளர் பாலமுருகன், பொருளாளர் தவமணி, துணை முதல்வர் மணிமாறன், சுயநிதிப்பிரிவு இயக்குநர் ராமமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் ஜெயசுந்தரி, இணை ஒருங்கிணைப்பாளர் சிவகாமசுந்தரி செய்திருந்தனர்.
