UPDATED : அக் 23, 2026 09:31 PM
ADDED : அக் 23, 2026 09:26 PM
அ நிறம் | அளவு
மதுரை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல்வர் கோப்பைக்கான மாநில அளவிலான பள்ளி மாணவிகளுக்கான ஹாக்கி போட்டி மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடந்தது.
லீக் முறையில் ஈரோடு, புதுக்கோட்டை, வேலுார், திருவண்ணாமலை மாவட்ட அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. புள்ளிகள் அடிப்படையில் புதுக்கோட்டை அணி முதலிடம் பெற்றது. ஈரோடு அணி 2ம் இடம், திருவண்ணாமலை அணி 3ம் இடம், வேலுார் அணி 4ம் இடம் பெற்றன.
