/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நிர்வாகிகள் இருந்தும் செயல்படாத 56 மருத்துவ துறைகளை கொண்ட மாநில ஒழுங்காற்று ஆணையம் பிசியோதெரபி படிப்பிற்கும் நீட் தேர்வு கட்டாயமாகிறது

ADDED : ஏப் 27, 2025 04:54 AM

மதுரை : மருத்துவ துறைகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட தேசிய ஒழுங்காற்று ஆணையத்தின் அடிப்படையில் தமிழகத்தில் அமைக்கப்பட்ட ஆணையம் செயல்பாடின்றி முடங்கியுள்ளது. பிசியோதெரபி படிப்பிற்கும் 'நீட்' தேர்வு கட்டாயம் என்ற பாடத்திட்டங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதற்கு தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என இந்தியன் அசோசியேஷன் ஆப் பிசியோதெரபிஸ்ட்கள் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
மதுரையில் இதன் தமிழ்நாடு கிளை தலைவர் கிருஷ்ணகுமார் கூறியதாவது:
பிசியோதெரபி, மனநல ஆலோசகர்கள், லேப் டெக்னீசியன், ஆக்குபேஷனல் தெரபிஸ்ட் உட்பட 56 மருத்துவ துறைகள் 10 தனிப்பட்ட கவுன்சில்களாக ஒருங்கிணைக்கப்பட்டு அவற்றிற்கான தேசிய ஒழுங்காற்று ஆணையம்(என்சிஏஎச்பி)2021ல் சட்டமாக நிறைவேற்றப்பட்டது.
இதன் அடிப்படையில் தமிழகத்தில் 2023 டிச.15ல் அரசாணை வெளியிடப்பட்டு, கடந்த மாதம் 15ம் தேதி 10 நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். இவையெல்லாம் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்ற ஐகோர்ட் உத்தரவால் நடந்தவை.
நிர்வாகிகள் நியமித்தார்களே தவிர ஒரு மாதத்திற்கும் மேலாகியும் இதுவரை எந்த அலுவலக பணியும் தொடங்கப்படவில்லை.
'நாடு முழுமைக்கான ஒரு பாடத்திட்டம்' என்ற கொள்கை படி தேசிய ஒழுங்காற்று ஆணையம் வடிவமைத்த புதிய தேசிய பாடத்திட்டத்தை ஏப்.23ல் மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டது. இதில் பிசியோதெரபி பட்டப்படிப்பு காலம் 5 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
பிசியோதெரபி படிப்பிற்கு நீட் தேர்வு கட்டாயம் போன்ற மத்திய அரசு இயற்றியுள்ள பாடத்திட்ட மாற்றங்கள் குறித்து தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பதில் குழப்பம் நீடிக்கிறது.
எங்கள் கோரிக்கைகளை அரசிடம் எடுத்துக்கூறி வந்தபோதிலும் அதன்மீதான நடவடிக்கைகள் குறித்து வெளிப்படையாக தெரிவிக்கப்படுவதில்லை. தேசிய அளவில் எங்கள் நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவுகள் எடுக்கப்படுகின்றன. தமிழகத்திலும் அதுபோன்று சூழல் உருவாக வேண்டும். இவ்வாறு கூறினார்.