/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மனு கொடுத்த மறுநாளே மாணவிக்கு கிடைத்தது தீர்வு; கலெக்டர் பிரவீன்குமார் நடவடிக்கை
/
மனு கொடுத்த மறுநாளே மாணவிக்கு கிடைத்தது தீர்வு; கலெக்டர் பிரவீன்குமார் நடவடிக்கை
மனு கொடுத்த மறுநாளே மாணவிக்கு கிடைத்தது தீர்வு; கலெக்டர் பிரவீன்குமார் நடவடிக்கை
மனு கொடுத்த மறுநாளே மாணவிக்கு கிடைத்தது தீர்வு; கலெக்டர் பிரவீன்குமார் நடவடிக்கை
ADDED : ஆக 06, 2025 01:09 AM
மதுரை; 'பிளஸ்2 தேர்ச்சி பெற்றும் ஆன்லைனில்' மதிப்பெண் குளறுபடியால் பொறியியல் படிக்க முடியாமல் தவித்த மாணவிக்கு கலெக்டர் பிரவீன்குமார் நடவடிக்கையால் பிரச்னைக்கு தீர்வு கிடைத்தது.
மதுரை அரும்பனுார் மாணவி ஜெயஸ்ரீ 18. பிளஸ்2 ல் 600க்கு 327 மதிப்பெண் பெற்றவர் தனியார் மருத்துவக் கல்லுாரியில் சேர விண்ணப்பித்தார். சீட் கிடைத்தபின், மாணவியின் மதிப்பெண்ணை கல்லுாரி நிர்வாகத்தினர் இணையதளத்தில் ஆய்வு செய்தனர். அதில் 2024 தேர்வில் மாணவி பிளஸ் 1ல் இயற்பியல் தேர்வில் தோல்வி அடைந்தவர் எனக் காட்டியது. ஆனால் அவரது மதிப்பெண் பட்டியலில் தேர்ச்சி பெற்றவர் என்றே இருந்தது. இணையத்தில் தெரிவித்த குளறுபடியான மதிப்பெண்ணை சரிசெய்து வரும்படி கல்லுாரி நிர்வாகம் தெரிவித்தது.
மாணவி ஜெயஸ்ரீ, முதன்மை கல்வி அலுவலர், அரசுத் தேர்வுத் துறை உதவி இயக்குனர் அலுவலகங்களுக்கு படையெடுத்தார். தற்காலிக சான்றிதழ் கிடைத்தது. பலமாதங்களாக போராடியும் மதிப்பெண் பட்டியலை சரிசெய்ய இயலவில்லை.
இதையடுத்து அவர் நேற்று முன்தினம் நடந்த குறைதீர் நாள் கூட்டத்தில் கலெக்டர் பிரவீன்குமாரிடம் மனு கொடுத்தார்.
கலெக்டர், உடனடியாக சென்னை தேர்வுத்துறை இணை இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு தெரிவித்தார். உடனே சரிசெய்வதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று இணையதளத்தில் மாணவியின் குளறுபடி மதிப்பெண்ணை சரிசெய்துவிட்டதாக தெரிவித்தனர். இதனை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து மாணவிக்கு இணையதள மதிப்பெண் பட்டியலை அனுப்பினர். மனு கொடுத்த மறுநாளே தீர்வு கிடைத்ததால் நன்றி தெரிவிப்பதாக மாணவி ஜெயஸ்ரீ கூறினார்.