/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தொட்டி இங்கே இருக்கு; போர்வெல் எங்கே இருக்கு
/
தொட்டி இங்கே இருக்கு; போர்வெல் எங்கே இருக்கு
ADDED : ஆக 16, 2025 12:49 AM

மேலுார்; கிடாரிப்பட்டியில் மேல்நிலை தொட்டியை மட்டும் கட்டிவிட்டு போர்வெல் போடாததால் மக்கள் குடிநீரை தேடி அலையும் அவலம் நிலவுகிறது.
கிடாரிப்பட்டி மாப்பாறை பகுதியில் 600க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப் பகுதியினருக்கு 3 தெருக் குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதால், ஒன்றிய அலுவலகம் மூலம் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவுடன் நீர் தேக்க தொட்டி ஒன்று ரூ.7 .30 லட்சத்தில் கட்டி குழாய்கள் பதிக்கப்பட்டது. அதேசமயம் போர்வெல் அமைக்காததால் தொட்டி பயன்பாட்டுக்கு வராமல் காட்சிப் பொருளாக உள்ளதால் மக்களின் வரிப்பணம் வீணாகிகிறது.
அப்பகுதியினர் கூறியதாவது : குடிநீர் பற்றாக்குறையை போக்க 2 ஆண்டுக்கு முன் மேல்நிலைத் தொட்டி கட்டினர். பணி முடிந்தும் சரி போர்வெல் அமைக்கவில்லை. அதனால் நீண்ட துாரம் அலைந்து திரிகிறோம். மாணவர்கள் பள்ளிக்கும், பெற்றோர்கள் வேலைக்கும் குறித்த நேரத்திற்கு செல்ல முடியவில்லை. பாசன நீரை பயன்படுத்துவதால் தொற்று நோய்க்கு ஆளாகிறோம். ஊராட்சி நிர்வாகம், மாவட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. அதிகாரிகள் போர்வெல் அமைத்து போதுமான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றனர்.