/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாநகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்கும் பணி; மக்களின் அச்சத்தை போக்க அதிகாரிகள் முயற்சி
/
மாநகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்கும் பணி; மக்களின் அச்சத்தை போக்க அதிகாரிகள் முயற்சி
மாநகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்கும் பணி; மக்களின் அச்சத்தை போக்க அதிகாரிகள் முயற்சி
மாநகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்கும் பணி; மக்களின் அச்சத்தை போக்க அதிகாரிகள் முயற்சி
ADDED : ஜன 08, 2025 07:33 AM
தற்போதைய மாநகராட்சி எல்லையை விரிவுபடுத்தும் வகையில் பரவை டவுன் பஞ்சாயத்து, கருப்பாயூரணி, ஒத்தக்கடை, நரசிங்கம், காதக்கிணறு, அரும்புனுார், கொடிக்குளம், செட்டிக்குளம், கோவில்பாப்பாக்குடி, ஆலாத்துார், பேச்சிகுளம், விரகனுார், நாகமலைபுதுக்கோட்டை, கரடிப்பட்டி, ஏற்குடி அச்சம்பத்து, துவரிமான், பெருங்குடி ஆகிய 16 ஊராட்சிகளை இணைக்கப்படவுள்ளன.
இதன் மூலம் மாநகராட்சி வார்டுகள் 100ல் இருந்து 120 ஆகவும், மண்டலங்கள் 5ல் இருந்து 6 ஆகவும் அதிகரிக்க உள்ளது.
ஆனால் இணைப்பு முடிவுக்கு நாகமலைபுதுக்கோட்டை, பரவை உள்ளிட்ட சில பகுதிகளில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சியுடன் இணைந்தால் சொத்துவரி உள்ளிட்ட வரிகள் உயரும், நுாறு நாள் வேலைத்திட்டம் ரத்தாகும் போன்ற காரணங்களை கூறி அச்சம் தெரிவிக்கின்றனர்.
மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: இணைப்பு குறித்து மக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் இனி நடக்க வாய்ப்பில்லை. ஊராட்சிகளை இணைக்கும் பணி துவங்கிவிட்டன. ஊராட்சிகளில் அரசியல்ரீதியாக சிலர் மக்களை திசை திருப்பி போராட்டத்திற்கு துாண்டி விடுவதாக தகவல் கிடைத்துள்ளது.
குறிப்பாக சொத்து வரி உயரும் என மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். மாநகராட்சி எல்லை 72ல் இருந்து 100 வார்டுகளாக விரிவாக்கம் செய்யப்பட்டு 14 ஆண்டுகளாகின்றன.
தற்போது வரை விரிவாக்கம் செய்யப்பட்ட சிந்தாமணி உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் அதே நிலையில் தான் வரி வகிதம் நிர்ணயிக்கப்படுகிறது.
பழைய வரிவிதிப்பு அடிப்படையில் தான் வரி உயர்த்தப்படுகிறது. நுாறு நாள் திட்டத்திற்கு பதில் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம் மூலம் மக்கள் பயன்பெறலாம். எனவே பாதிப்பு இருக்காது.
ஆனால் குடிநீர், ரோடுகள் வசதி, பாதாளச் சாக்கடை வசதிகள் என நகருக்கான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படும். வளர்ச்சி திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகளும் அதிகரிக்கும். மக்களின் வாழ்க்கை தரம் மேம்படும். ஆனால் மாநகராட்சியுடன் இணைந்தால் ஊராட்சிகள், மாநகராட்சியில் ஒரு வார்டாக தான் மாறும்.
இதனால் கவுன்சிலர் பதவிக்கு தான் போட்டியிட முடியும். ஊராட்சி தலைவராக முடியாது என கருதும் சிலர் அரசியல் ரீதியாக மக்களை திசை திருப்பி போராட துாண்டி வருகின்றனர்.
அவர்கள் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மாநகராட்சியுடன் இணைவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து மக்களிடம் விளக்கப்படும் என்றார்.