sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கண்ணீர் வற்றிய விவசாயிகள்; பேரையூர் வயல்வெளியில் நிரம்பிய தண்ணீரால்; 20 ஆயிரம் ஏக்கர் மக்காச்சோள பயிர்கள் சேதம்

/

கண்ணீர் வற்றிய விவசாயிகள்; பேரையூர் வயல்வெளியில் நிரம்பிய தண்ணீரால்; 20 ஆயிரம் ஏக்கர் மக்காச்சோள பயிர்கள் சேதம்

கண்ணீர் வற்றிய விவசாயிகள்; பேரையூர் வயல்வெளியில் நிரம்பிய தண்ணீரால்; 20 ஆயிரம் ஏக்கர் மக்காச்சோள பயிர்கள் சேதம்

கண்ணீர் வற்றிய விவசாயிகள்; பேரையூர் வயல்வெளியில் நிரம்பிய தண்ணீரால்; 20 ஆயிரம் ஏக்கர் மக்காச்சோள பயிர்கள் சேதம்


ADDED : ஜன 08, 2024 05:03 AM

Google News

ADDED : ஜன 08, 2024 05:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேரையூர் : பேரையூர் தாலுகாவில் 20 ஆயிரம் ஏக்கரில் மக்காச்சோளம் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், மழைநீரில் மூழ்கி சேதமானதால், விவசாயிகள் கண்ணீர் வற்றுமளவு வேதனையில் வாடுகின்றனர்.

பேரையூர் மலையடிவார பகுதியில் கனமழை பெய்ததால் 30க்கும் மேற்பட்ட கண்மாய்கள் நிரம்பி மறுகால் செல்கின்றன. மறுகால் பாய்ந்து செல்லும் ஓடைகள் ஆக்கிரமிப்பில் உள்ளதால் மழைநீர் பக்கத்தில் உள்ள விளை நிலங்களில் புகுந்துள்ளது. இதனால் இப்பகுதியில் பயிரிட்டுள்ள சோளம், தினை, வாழை, தென்னை, மக்காச்சோளம், பருத்தி பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமாகியுள்ளன.

பருத்தி பயிர்களில் தண்ணீர் தேங்கியுள்ளதாலும், வெடித்த பஞ்சு நனைந்துள்ளதாலும் அவற்றை எடுக்க முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். மேலும் பருத்திச் செடிகள் அழுகி வருகின்றன. நெல் பயிர்கள் ஆயிரம் ஏக்கருக்கு மேல் சாய்ந்து வீணாகிவிட்டது. நாற்பதாயிரம் ஏக்கர் மக்காச்சோளம் கடந்த ஆடி மாதத்தில் சாகுபடி செய்திருந்த நிலையில் தற்போது அறுவடைக்கு தயாராகிவிட்டது. தொடர்மழை காரணமாக மக்காச்சோள கதிர்கள் நனைந்து விளை நிலத்தில் முளைவிட்டு வருகின்றன. அறுவடை செய்யாமல் வீணாவதைக் கண்டு விவசாயிகள் கண்ணீர் விடுகின்றனர்.

விவசாயி துர்க்கைபாண்டி: ஏழு ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளேன். பத்து நாட்களுக்கு முன்பு அறுவடைக்கு தயாராக இருந்தது. தொடர் மழையால் அறுவடை செய்ய இயலவில்லை. நிலத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மக்காச்சோள கதிர்கள் நனைந்து முளைத்து வீணாகி வருகிறது. இனி அறுவடை செய்தும் பயனில்லை. ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் செலவு செய்து, நன்கு விளைந்து ஏக்கருக்கு 20 குவிண்டால் கிடைக்கும் என எதிர்பார்த்தேன். அனைத்தும் வீணாகிவிட்டதே, என்றார்.

விவசாயி செல்வராஜ்: ''எட்டு ஏக்கர் சாகுபடி செய்து இருந்தேன். மக்காச்சோளத்திற்கு நல்ல விலையும் விளைச்சலும் இருந்த போதிலும் மழையால் அறுவடை செய்ய முடியாமல் வீணாகிவிட்டது. அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டும்'' என்றார்.






      Dinamalar
      Follow us