நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொட்டாம்பட்டி: வஞ்சிநகரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினர் கல்வி திட்டம், புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நபார்டு வங்கி நடத்திய உலக கூட்டுறவு ஆண்டு விழா என முப்பெரும் விழா நடந்தது.
நிர்வாகி கருப்பசாமி வரவேற்றார். மேற்பார்வையாளர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் சக்தி பாலன் உறுப்பினர் மற்றும் மக்களுக்கு திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார். சங்க செயலாளர் சோமசுந்தரம் நன்றி கூறினார்.

