sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

உ.பி., யில் இருந்து மதுரை ஆவினுக்கு வந்த ரூ.4 கோடி 'பட்டரில்' துர்நாற்றம் தனியாரை ஊக்குவிக்குதா ஆவின்

/

உ.பி., யில் இருந்து மதுரை ஆவினுக்கு வந்த ரூ.4 கோடி 'பட்டரில்' துர்நாற்றம் தனியாரை ஊக்குவிக்குதா ஆவின்

உ.பி., யில் இருந்து மதுரை ஆவினுக்கு வந்த ரூ.4 கோடி 'பட்டரில்' துர்நாற்றம் தனியாரை ஊக்குவிக்குதா ஆவின்

உ.பி., யில் இருந்து மதுரை ஆவினுக்கு வந்த ரூ.4 கோடி 'பட்டரில்' துர்நாற்றம் தனியாரை ஊக்குவிக்குதா ஆவின்


ADDED : நவ 05, 2025 12:37 AM

Google News

ADDED : நவ 05, 2025 12:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: உ.பி.,யில் உள்ள தனியார் பால் நிறுவனத்திடமிருந்து மதுரை ஆவினுக்கு அனுப்பப்பட்ட ரூ.4 கோடி மதிப்பிலான வெண்ணெய் (பட்டர்) துர்நாற்றம் வீசியதால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். கூட்டுறவு நிறுவனங்கள் உள்ள நிலையில் தனியாரிடம் ஏன் கொள்முதல் செய்ய வேண்டும் என சர்ச்சை எழுந்துள்ளது.

உத்தரபிரதேசத்தின் கிர்பா ராம் டெய்ரி பிரைவேட் லிமிடெட் (லிலாதர் அண்ட் டெய்லி ஹெல்த்) என்ற நிறுவனத்திடமிருந்து அக்., மாதம் மூன்று கட்டங்களாக 81 டன் வெண்ணெய் மதுரை ஆவினுக்கு கொண்டுவரப்பட்டது. இதன் மதிப்பு ரூ.4 கோடிக்கும் மேல். ஆவின் அலுவலகத்தில் மைனஸ் 18 டிகிரியில் உள்ள கோல்டு ஸ்டோரேஜில் வைக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் நெய் தயாரிப்பதற்காக பயன்படுத்தப்பட்டபோது துர்நாற்றம் வீசியதால் தயாரிப்பு நிறுத்தப்பட்டது. இதுகுறித்து சென்னை பெடரேஷன் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மீண்டும் உ.பி., நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கையில் மதுரை ஆவின் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

ஆவின் அலுவலர்கள் கூறியதாவது: தனியார் நிறுவனம் வெண்ணெய் கொண்டுவரும்போது அதை இறக்கி வைப்பதற்கு முன்பே உரிய பரிசோதனைகள் மேற்கொண்டு தரமானதா என ஆய்வு செய்ய வேண்டும். தரமில்லையென்றால் அப்போதே திருப்பி அனுப்பி வைத்திருக்கலாம். ஆனால் உரிய பரிசோதனை நடக்கவில்லை. தற்போது திருப்பி அனுப்பி வைக்கப்படும் வெண்ணெய்யை அந்த தனியார் நிறுவனம் ஏற்றுக்கொள்ளுமா என்பது சந்தேகமே. அவ்வாறு ஏற்கவில்லையென்றால் அதற்கான நஷ்டத்தை எவ்வாறு ஈடுகட்டுவது என அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர்.

தனியார் நிறுவனத்தில்கொள்முதல் ஏன் ஆவின் ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:

சென்னை பெடரேஷன் (இணையம்) கீழ் 27 ஆவின் ஒன்றியங்கள் உள்ளன. நாள் ஒன்றுக்கு 37 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. 32 லட்சம் லிட்டர் வரை விற்பனை செய்யப்படுகிறது.

இதுதவிர நெய் உட்பட பால் பொருட்கள் விற்பனையும் நடக்கிறது. ஆவின் நெய்யை மக்கள் அதிகம் வாங்குகின்றனர்.

பால் கொள்முதலில் தட்டுப்பாடு ஏற்படும் நேரத்தில் பால் பவுடர் மூலம் பற்றாக்குறையை சரிசெய்ய பொதுவாக குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட அரசு கூட்டுறவு பால் நிறுவனங்களில் இருந்து வெண்ணைய் கொள்முதல் செய்யப்பட்டது.

ஆனால் சில ஆண்டுகளாக சென்னை பெடரேஷன் அதிகாரிகள் முடிவால் உ.பி., கிர்பா ராம் டெய்ரி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.

கடந்தாண்டு மதுரை ஆவினில் தயாரிக்கப்பட்ட நெய் திருப்பதி கோயில் லட்டுக்கு பயன்படுத்த அனுப்பி வைத்தபோது தரமில்லை என ஏற்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது. அப்போதும் இதுபோல் தனியார் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட வெண்ணெய் மூலம்தான் நெய் தயாரிக்கப்பட்டிருந்தது.

சில அதிகாரிகள் விருப்பத்தால் இதுபோல் தனியாரிடம் ஒப்பந்தம் செய்யப்படுகிறது. இனிமேலாவது அரசு கூட்டுறவு நிறுவனங்களில் வெண்ணெய் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.






      Dinamalar
      Follow us