ADDED : செப் 07, 2026 10:12 PM
அ நிறம் | அளவு
புதுார்: மதுரை புதுார் லுார்து அன்னை புதிய சர்ச்சின் 100வது தின நன்றி விழா, பங்கின் பவள விழா நிறைவு, மாதாவின் பிறப்பு விழா ஆகிய முப்பெரும் விழாவை முன்னிட்டு, திருச்சி சலேசிய மறை மாநிலத்தின் உதவி தலைவர் விக்டர் தலைமையில் நன்றி திருப்பலி நடந்தது.
பாதிரியார்கள் ஜார்ஜ், பாக்கியராஜ், பிரபு, ஜேப்பிசன் உட்பட சலேசியர்கள், துறவியர்கள் முன்னிலை வகித்தனர். விழாவை முன்னிட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அன்னையின் தேர், மாதா கோவில் ரோடு, பாரதியார் மெயின் ரோடு, அழகர்கோவில் ரோடு வழியாக சர்ச் வந்தடைந்தது. பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏற்பாடுகளை இளைஞர்கள், பணிக்குழுக்கள் செய்திருந்தனர்.
