/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கட்டணமின்றி கடக்கிறோம் என டிரைவரிடம் எழுதி வாங்கிய டோல்கேட் நிர்வாகம்
/
கட்டணமின்றி கடக்கிறோம் என டிரைவரிடம் எழுதி வாங்கிய டோல்கேட் நிர்வாகம்
கட்டணமின்றி கடக்கிறோம் என டிரைவரிடம் எழுதி வாங்கிய டோல்கேட் நிர்வாகம்
கட்டணமின்றி கடக்கிறோம் என டிரைவரிடம் எழுதி வாங்கிய டோல்கேட் நிர்வாகம்
ADDED : ஜூலை 11, 2025 03:51 AM
திருமங்கலம்: கப்பலுார் டோல்கேட்டில் கட்டண பாக்கிக்காக அரசு பஸ்கள் அனுமதிப்பதில் சிக்கல் ஏற்பட்ட நிலையில் 'கட்டணமின்றி கடக்கிறோம்' என டிரைவர், கண்டக்டர்களிடம் டோல்கேட் நிர்வாகம் எழுதி வாங்கியது.
மதுரை -- கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையில் கப்பலுார், விருதுநகர் மாவட்டம் சாத்துார், எட்டூர் வட்டம், தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு சாலைப்புதுார், நெல்லை மாவட்டம் நாங்குநேரி ஆகிய இடங்களில் டோல்கேட்கள் உள்ளன. இதில் அரசு பஸ்கள் ரூ. 276 கோடி கட்டணம் பாக்கி வைத்திருப்பதாக கூறி டோல்கேட்டை நிர்வகிக்கும் தனியார் நிறுவனங்கள் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. ஜூலை 10 முதல் பஸ்களை அனுமதிக்க தடை விதித்த நீதிமன்றம், நேற்று நடந்த விசாரணையில் இம்மாதம் வரை அனுமதிக்கலாம் எனக்கூறியது.
இதனால் நேற்று டோல்கேட்டை கடந்து செல்லும் டவுன் பஸ்களின் கண்டக்டர், டிரைவர்களிடம் தாங்கள் இந்த டோல்கேட்டை கட்டணமின்றி கடந்து செல்வதாக கூறி படிவத்தில் கையெழுத்து வாங்கிக்கொண்டு அனுப்பினர்.
போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: திருமங்கலத்தில் இருந்து மதுரைக்கு தினமும் 986 தடவை டவுன் பஸ்கள் செல்கின்றன. இதில் திருமங்கலம் பணிமனையில் இருந்து மட்டும் 52 டவுன் பஸ்கள் மதுரைக்கு செல்கின்றன. குறைந்தபட்சம் 10 முதல் 18 தடவை ஒரு பஸ் 'ட்ரிப்' சென்று வருகிறது. மேலும் மதுரை, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பணிமனைகளில் இருந்தும் தினமும் 40க்கும் மேற்பட்ட டவுன் பஸ்கள் திருமங்கலம் பகுதிக்கு வந்து செல்கின்றன.
டவுன் பஸ்களுக்கு தற்போது வரை 'பாஸ்ட் ட்ராக்' முறை இல்லாமல் சென்று வந்த நிலையில் தற்போது கட்டணம் வசூலிப்பதற்காக இந்த நடைமுறையை டோல்கேட் நிர்வாகம் செயல்படுத்த முயற்சிக்கிறது. ஆனால் திருமங்கலத்தில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் டவுன் பஸ்களும், மதுரையின் மற்ற பணிமனைகளில் இருந்து இயக்கப்படும் பஸ்களும் நான்கு வழிச்சாலையை பயன்படுத்துவது இல்லை. சர்வீஸ் ரோட்டை மட்டுமே பயன்படுத்துகின்றன. இதற்கு கட்டணம் வசூலிப்பது இல்லை. அந்த நடைமுறையை தொடர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.