/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
செம்புக்குடி பட்டியில் உடல் மீது உடலை அடக்கம் செய்யும் அவலம்
/
செம்புக்குடி பட்டியில் உடல் மீது உடலை அடக்கம் செய்யும் அவலம்
செம்புக்குடி பட்டியில் உடல் மீது உடலை அடக்கம் செய்யும் அவலம்
செம்புக்குடி பட்டியில் உடல் மீது உடலை அடக்கம் செய்யும் அவலம்
ADDED : ஆக 05, 2025 05:41 AM

அலங்காநல்லுார் : அலங்காநல்லுார் ஒன்றியம் தனிச்சியம் ஊராட்சி செம்புக்குடிப்பட்டியில் மயானம் இல்லாததால் இறந்தவர்களின் உடலை பாசன வாய்க்கால் கரையில் புதைக்கும் அவலம் பல ஆண்டுகளாக தொடர்கிறது.
இக்கிராமத்தில் 600 குடும்பங்களுக்கு மேல் வசிக்கின்றன. இங்கு யாரேனும் இறந்தால் அவர்கள் உடலை ஊர் எல்லையில் உள்ள பாசன வாய்க்கால் கரையில் புதைக்கின்றனர். தற்போது அதில் தனியாரின் நிலமும் உள்ளது தெரியவந்துள்ளது.
அப்பகுதியினர் கூறியதாவது:
இங்கு பல்வேறு சமுதாய மக்கள் வசிக்கின்றோம். கிராம மக் களுக்கென பொது மயானம் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் இறந்த வர் உடலை வாய்க்கால் கரையில் புதைக்கின்றனர். அப்போது ஏற்கனவே அதே இடத்தில் அடக்கம் செய்தவர் களின் உடல் எலும்புகளை அகற்றும் அவலம் தொடர்கிறது. கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றியும் நடவடிக்கை இல்லை என்றனர்.
விஜயகுமார்: எனக்கு விவரம் தெரிந்து கிராமத்திற்கு மயான வசதி இல்லை. வெங்கடேசன் எம்.எல்.ஏ.,விடம் பொது மயானத்திற்கு இடம் தேர்வு செய்து தரும்படி மனு கொடுத்தோம். அவர், தாசில்தார், வருவாய் துறையினருக்கு பரிந் துரைத்தார். இடம் கிடைக்கவில்லை என்றால் தேர் தலில் பதிலடி கொடுப்போம் என்றார்.