/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
டங்ஸ்டன் திட்டம்: கிராம மக்கள் முடிவு
/
டங்ஸ்டன் திட்டம்: கிராம மக்கள் முடிவு
ADDED : நவ 22, 2024 04:40 AM

மேலுார்: மேலுார் அருகே நாயக்கர்பட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் 5 ஆயிரம் ஏக்கரில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஏலம் எடுத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று அரிட்டாபட்டியில் 10 கிராம மக்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. நாளை (நவ.23) நடக்கும் கிராமசபை கூட்டத்தில் திட்டத்தை ரத்து செய்யக்கோரி தீர்மானம் நிறைவேற்றி ஜனாதிபதி, பிரதமர், கலெக்டர் உள்ளிட்டோருக்கு அனுப்பவும், நவ.26 அழகர்கோவிலில் கூட்டம் போட்டு அடுத்த கட்ட போராட்டம் குறித்து ஆலோசிக்கவும் முடிவு செய்யப்பட்டது.
களஆய்வு
டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதால் விவசாயம், பறவைகள் பல்லுயிர் தலம், பாரம்பரியமிக்க வரலாற்று சின்னங்கள் அழியும் அபாயம் உள்ளதாககூறி காவிரி வைகை கிருதுமால் - குண்டாறு இணைப்பு கால்வாய் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு மாநில தலைவர் மாரிமுத்து, பொதுச் செயலாளர் அர்ச்சுனன், மாநில செயலாளர் முருகன் கள ஆய்வு செய்தனர். மதுரை, சிவகங்கை, விருதுநகர் புதுக்கோட்டை நிர்வாகிகள் உடனிருந்தனர்.