/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இருவாரங்களாக தொடரும் காத்திருப்பு போராட்டம்
/
இருவாரங்களாக தொடரும் காத்திருப்பு போராட்டம்
ADDED : ஆக 31, 2025 04:53 AM

மதுரை: மதுரை பைபாஸ் ரோடு அரசுப் போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன், 13வது நாளாக போக்குவரத்து ஊழியர்களின் காத்திருப்பு போராட்டம், சி.ஐ.டி.யு., செயலாளர் சுதாகரன் தலைமையில் நடந்தது.
அனைத்துத்துறை அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் கிருஷ்ணன் துவக்கி வைத்தார். ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
கல்வித் தகுதிக்கேற்ப வாரிசு வேலை வழங்க வேண்டும். 15வது ஊதிய ஒப்பந்த நிலுவையின் முதல் காலாண்டு தவணையை வழங்க வேண்டும். 2023 ஜூலை முதல் நிறுத்தி வைத்துள்ள ஓய்வு கால பலன்களை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தினர்.
சி.ஐ.டி.யு., பொதுச் செயலாளர் அழகர்சாமி, பொருளாளர் சிவக்குமார், துணைத் தலைவர் ராஜேந்திரன், ஓய்வு பெற்ற ஊழியர் சங்க பொதுச் செயலாளர் வாசுதேவன் உட்பட பலர் பங்கேற்றனர்.