/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
டூவீலர் டயர் வெடித்து லாரி மீது மோதி பலி
/
டூவீலர் டயர் வெடித்து லாரி மீது மோதி பலி
ADDED : மார் 02, 2024 04:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம் : சிந்துபட்டி அருகே பி.எம்.டி., நகரை சேர்ந்த பாண்டி 55, இவர் தனது மகன் பிரவீன் குமாருடன் கரையாம்பட்டி கிராமத்தில் குடிநீர் பைப் லைன்காக பிளம்பர் வேலை செய்துள்ளார்.
டூவீலரில் (ஹெல்மெட் அணிந்திருந்தார்) ஊருக்கு சென்று மகனுக்கு சாப்பாடு வாங்கிக்கொண்டு வந்துள்ளார். சிந்துபட்டி உசிலம்பட்டி ரோட்டில் பாண்டியன் நகர் அருகே வந்தபோது டூவீலரின் டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்து. முன்னால் பழுதாகி நின்ற சிமெண்ட் ஏற்றி சென்ற லாரி மீது மோதியதில் காயமடைந்தார். உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலியானார். சிந்துபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

