/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கழிவுநீர் கலப்பால் துக்கப்படும் வைகை ஆறு: இயலாமையால் கைவிரிக்கும் நீர்வளத்துறை

UPDATED : பிப் 13, 2024 06:55 AM
ADDED : பிப் 13, 2024 03:53 AM

மதுரை : மதுரை வைகை ஆற்றின் இருகரையில் மாநகராட்சியின் கழிவுநீர் வெளியேறுவதால் ஆற்றின் தடுப்பணை பகுதிகளில் துர்நாற்றம் வீசுகிறது.
கோச்சடை முதல் விரகனுார் ரிங் ரோடு வரை 12 கி.மீ., துாரத்திற்கு 28 இடங்களில் மாநகராட்சியின் கழிவு நீர் ஆற்றில் விடப்படுகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டம் முடிவடையும்போது மாற்று திட்டம் உருவாக்கப்படும் என மூன்று ஆண்டுகளாக மாநகராட்சி கூறிவருகிறது. மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் முறையிட்டும் தீர்வு கிடைக்கவில்லை.
நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது: ஆற்றின் கரையில் இருந்து கழிவுநீர் வரும் குழாய்களை அடைத்து விட்டால் வீடுகளின் கழிவுநீர் அனைத்தும் ரோட்டில் தேங்கிவிடும். இதனால் தேவையற்ற சுகாதார பிரச்னை ஏற்படும் என்பதால் வேறு வழியின்றி மாநகராட்சி, மாவட்ட நிர்வாகத்திடம் முறையிடுகிறோம்.
வைகையாற்றில் கோச்சடை, ஆரப்பாளையம், ஏ.வி. பாலம், ஓபுளா படித்துறை அருகில் தடுப்பணைகளை சுற்றி கழிவு நீர் தேங்குகிறது. இதில் ஆகாயத்தாமரைகள் வளர்வதால் தண்ணீர் செல்ல முடியாமல் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மாநகராட்சி மனது வைத்தால் மட்டுமே வைகை ஆற்றை காப்பாற்ற முடியும் என்றனர்.