/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தென்கரை, திருவேடகத்தில் திருக்கல்யாணம்
/
தென்கரை, திருவேடகத்தில் திருக்கல்யாணம்
ADDED : அக் 30, 2025 04:11 AM

சோழவந்தான்: சோழவந்தான் அருகே தென்கரை மூலநாதசுவாமி கோயிலில் கந்த சஷ்டியை முன்னிட்டு திருக் கல்யாணம் நடந்தது.
முருகன், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், யாக பூஜைகள் செய்யப்பட்டு பாவாடை தரிசனம் நடந்தது. இதைதொடர்ந்து திருக்கல்யாணம் நடந்தது. மாப்பிள்ளை வீட்டாராக கண்ணன், பெண் வீட்டார்களாக கணேசன், முகேஷ் பட்டர்கள் சடங்கை நடத்தினர். பக்தர்களுக்கு திருமண விருந்து வழங்கப்பட்டது. முருகன், வள்ளி தெய்வானையுடன் மணக்கோலத்தில் நான்கு ரத வீதிகளில் பவனி வந்தார்.
திருவேடகம் ஏடகநாதர் கோயிலில் மாப்பிள்ளை வீட்டாராக ஸ்ரீ வர்ஷன், பெண் வீட்டாராக சம்பத் பட்டர்கள் சடங்கை நடத்தினர். இதைதொடர்ந்து வெள்ளிமயில் வாகனத்தில் முருகன், வள்ளி தெய்வானையுடன் நான்கு ரத வீதிகளில் பவனி வந்தார். அன்னதானம் வழங்கப்பட்டது.

