sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 26, 2025 ,புரட்டாசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மத்திய அரசு கொண்டு வந்த திட்டம் என்பதால் 4 ஆண்டுகளாக கண்டுகொள்ளாத தமிழக அரசு குழந்தைகளின் நலனும், 513 பணியாளர்களின் நிலையும் கேள்விக்குறி

/

மத்திய அரசு கொண்டு வந்த திட்டம் என்பதால் 4 ஆண்டுகளாக கண்டுகொள்ளாத தமிழக அரசு குழந்தைகளின் நலனும், 513 பணியாளர்களின் நிலையும் கேள்விக்குறி

மத்திய அரசு கொண்டு வந்த திட்டம் என்பதால் 4 ஆண்டுகளாக கண்டுகொள்ளாத தமிழக அரசு குழந்தைகளின் நலனும், 513 பணியாளர்களின் நிலையும் கேள்விக்குறி

மத்திய அரசு கொண்டு வந்த திட்டம் என்பதால் 4 ஆண்டுகளாக கண்டுகொள்ளாத தமிழக அரசு குழந்தைகளின் நலனும், 513 பணியாளர்களின் நிலையும் கேள்விக்குறி


ADDED : செப் 25, 2025 11:55 PM

Google News

ADDED : செப் 25, 2025 11:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: குழந்தைகள் நலனுக்காக மத்திய அரசு கொண்டு வந்த வாத்சல்யா திட்டத்தை தமிழக அரசு 4 ஆண்டுகளாக கண்டுகொள்ளாததால் 513 பணியாளர்களின் நிலையும், குழந்தைகளின் நலனும் கேள்விக்குறியாகி உள்ளது.

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் குழந்தைகள் நலன், பாதுகாப்பை உறுதி செய்ய 2012ல் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டம் 2021-22ல் 'மிஷன் வாத்சல்யா' என்று பெயர் மாற்றப்பட்டது. இத்திட்டத்திற்கு மத்திய அரசு நிதியுதவி செய்து வருகிறது.

குழந்தைகள் திருமணத்தை தடுத்தல், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, குழந்தைகள் பாதுகாப்பு, பாலியல் வன்முறைகளில் இருந்து காத்தல் இதன் நோக்கமாக உள்ளது. இத்திட்டத்தின் கீழ் வரும் குழந்தைகள் தொடர்பான விபரங்கள் ரகசியம் காக்கப்படும்.

தமிழகத்தில் இத்திட்டத்தின்கீழ் திட்ட அலுவலர்கள், சட்டம், பாதுகாப்பு அதிகாரிகள், கணக்காளர்கள், ஆலோசகர்கள் உட்பட 513 பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு சம்பளத்தோடு வருங்கால வைப்பு நிதி, காப்பீடு திட்டங்கள் போன்ற பலன்கள் உண்டு. தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பிறகு 4 ஆண்டுகளாக இதுபோன்ற சலுகைகள், பணிப்பலன்கள் பணியாளர்களுக்கு வழங்கப்படவில்லை.

இதுகுறித்து தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அறிந்த மதுரை சமூக ஆர்வலர் கார்த்திக் கூறியதாவது: இப்பணியாளர்களுக்கு 2 மாதங்களாக சம்பளமும் வழங்கவில்லை. இதனால் ஆர்வமின்றி இவர்கள் களப்பணியாற்றுவதால் இத்திட்டம் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குழந்தைகளின் நலன் பாதிக்கும் அபாயம் உள்ளது. குறிப்பாக டீன் ஏஜ் பிரசவம் எண்ணிக்கை அதிகரிப்பு, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் விசாரணையில் மெத்தனபோக்கு, வழக்குகள் தேக்கம் என இத்திட்டம் நாளுக்கு நாள் செயல் இழந்து வருகிறது. இதுகுறித்து மத்திய அரசிடம் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேட்டபோது தமிழக அரசிடம்தான் கேட்க வேண்டும் என பதில் அளித்தது.

மத்திய அரசின் திட்டம் என்பதால் தமிழக அரசு கண்டுக்கொள்ளாமல் இருக்கிறதோ என எண்ணத்தோன்றுகிறது. இதனால் 513 பணியாளர்களின் நிலை கேள்விக்குறியாக உள்ளது. இத்திட்டம் மணிப்பூர், ஆந்திரா மாநிலங்களில் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. குழந்தைகள் நலன்கருதி இத்திட்டத்திற்கு தமிழக அரசு உயிரூட்ட வேண்டும். பணியாளர்கள் நலன் காக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us