/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அலுவலக கழிப்பறையில் வீடியோ: மின் ஊழியர் கைது
/
அலுவலக கழிப்பறையில் வீடியோ: மின் ஊழியர் கைது
ADDED : செப் 25, 2025 11:56 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி: மதுரை அருள்தாஸ்புரத்தை சேர்ந்தவர் ராஜராஜேஸ்வரன் 33. சமயநல்லுார் மின்வாரிய அலுவலகத்தில் வணிக ஆய்வாளராக உள்ளார்.
நேற்று மதியம் அலுவலக வளாகத்தில் பெண்கள் கழிப்பறை ஜன்னல் வழியாக அலைபேசியில் வீடியோ எடுத்துள்ளார். இதனைப் பார்த்த மின்வாரிய பெண் ஊழியர் கூச்சல் போட்டார். அங்கிருந்து தப்பிய ராஜராஜேஸ்வரன் அலுவலகத்தில் தனது நாற்காலியில் அமர்ந்திருந்தார். மின்வாரிய செயற்பொறியாளர் ஜெயலட்சுமி, ஊழியர் ராஜராஜேஸ்வரனின் அலைபேசியை வாங்கி பார்த்த போது, அவர் சில மாதங்களாக இப்படி வீடியோ எடுத்தது தெரிந்தது.
சமயநல்லுார் அனைத்து மகளிர் போலீசார் ராஜராஜேஸ்வரனை கைது செய்தனர்.