/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வருவாய்த்துறை அலுவலர் புறக்கணிப்பால் உங்களுடன் ஸ்டாலின் முகாம் பாதிப்பு நிதிசாரா கோரிக்கைகூட நிறைவேறாததால் அதிருப்தி
/
வருவாய்த்துறை அலுவலர் புறக்கணிப்பால் உங்களுடன் ஸ்டாலின் முகாம் பாதிப்பு நிதிசாரா கோரிக்கைகூட நிறைவேறாததால் அதிருப்தி
வருவாய்த்துறை அலுவலர் புறக்கணிப்பால் உங்களுடன் ஸ்டாலின் முகாம் பாதிப்பு நிதிசாரா கோரிக்கைகூட நிறைவேறாததால் அதிருப்தி
வருவாய்த்துறை அலுவலர் புறக்கணிப்பால் உங்களுடன் ஸ்டாலின் முகாம் பாதிப்பு நிதிசாரா கோரிக்கைகூட நிறைவேறாததால் அதிருப்தி
ADDED : செப் 25, 2025 11:57 PM
மதுரை: நீண்ட கால கோரிக்கைகள் மட்டுமல்ல நிதிசாரா கோரிக்கைகளும் நிறைவேறவில்லையே என்று கருதும் வருவாய்த்துறை அலுவலர்கள், நேற்று முதல் உங்களுடன் ஸ்டாலின் முகாமை புறக்கணித்து வருகின்றனர். அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நேற்று காத்திருப்பு போராட்டத்தை துவக்கிய அவர்கள், நிறைவேறும் வரை விதிப்படி வேலை செய்யும் போராட்டத்தை துவக்கியுள்ளனர்.
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் புதிய பென்ஷன் திட்டம் ரத்து உட்பட பொதுவான கோரிக்கைகள் பலவற்றுக்காக பிற சங்கத்தினருடன் இணைந்து போராடி வருகின்றனர். இதுதவிர தங்கள் துறை சார்ந்த 9 அம்ச கோரிக்கைகளையும் வலியுறுத்தி வருகின்றனர். உங்களுடன் ஸ்டாலின் முகாம் போன்ற திட்ட மனுக்களை பரிசீலிக்க அவகாசம் அளிக்க வேண்டும். வருவாய்த்துறையினருக்கு பணிபாதுகாப்பு வழங்க வேண்டும். வருவாய், பேரிடர் துறையில் காலியிடங்களை நிரப்ப வேண்டும்.
மனஅழுத்தத்துடன் பணியாற்றுவதை தவிர்க்க நிர்பந்தம் செய்வதை தவிர்க்க வேண்டும். பணிப்பளுவை கருத்தில் கொண்டு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். கருணை அடிப்படையிலான பணி நியமனத்தை 25 சதவீதமாக உயர்த்த வேண்டும். வி.ஏ.ஓ.,க்கள் அந்தந்த கிராமம் என்பதை மாற்றி தாலுகா எல்லைக்குள் தங்க அனுமதிக்க வேண்டும். ஜூலை 1 ஐ வருவாய்த்துறை தினமாக அனுசரிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
வருவாய் அலுவலர்கள் கூறியதாவது: மேற்கண்ட கோரிக்கைகளில் பல நிதிசாராதவை. நீண்ட கால கோரிக்கைகளை மட்டுமல்ல, நிதிதேவையில்லாதவற்றை நிறைவேற்றுவதால் செலவினம் எதுவும் வராது. பலமுறை போராடியும் கைகூடாததால் புதிய போராட்டம் துவக்கியுள்ளோம். உங்களுடன் ஸ்டாலின் முகாமை புறக்கணிப்பது, நேற்று கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம், வரும் நாட்களில் காலை 9:45 மணி முதல் மாலை 5:30 மணி வரை விதிப்படி வேலை செய்வது என ஈடுபட்டுள்ளோம். எங்கள் கோரிக்கைகளுக்காக முதலமைச்சர், மூன்று அமைச்சர்கள், அதிகாரிகள் என பலரையும் சந்தித்து விட்டோம். பலனில்லாததால் மாநில அளவில் போராட்டத்தை துவக்கியுள்ளோம் என்றனர்.
முதல்நாளான நேற்று மாலை மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் மதியம் 3:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை வருவாய் அலுவலர்கள் மாநில தலைவர் எம்.பி.முருகையன், மாவட்ட தலைவர் கோபி தலைமையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.