ADDED : நவ 19, 2026 05:41 PM
அ நிறம் | அளவு
மதுரை: விருதுநகரைச் சேர்ந்த 29 வயது பெண், தனது குழந்தையின் சிகிச்சைக்காக மதுரை பைபாஸ் ரோட்டில் உள்ள குழந்தைநல டாக்டர் ஆர்.
துரைராஜிடம் 83, சென்றார். அப்போது தன்னிடம் டாக்டர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் அளித்தார். டாக்டர் கைது செய்யப்பட்டு, வயது முதிர்வால் போலீஸ் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். அவரை மீண்டும் கைது செய்யக்கோரி இன்று (நவ.,19) கலெக்டர் அலுவலகத்தை அப்பெண்ணும், உறவினர்களும் முற்றுகையிட்டனர். கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணாவிடம் வலியுறுத்தினர். மாலை 4:00 மணிக்குப் பின் கலைந்து சென்றனர்.
