/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
திருப்பரங்குன்றத்தில் தீர்த்த உற்ஸவம்
/
திருப்பரங்குன்றத்தில் தீர்த்த உற்ஸவம்
ADDED : அக் 22, 2025 12:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அமாவாசையை முன்னிட்டு அஸ்தர தேவருக்கு தீர்த்த உற்ஸவம் நடந்தது.
வழக்கமாக பல்லக்கில் அஸ்தரதேவர் சரவணப் பொய்கை கொண்டு செல்லப்பட்டு, ஆறுமுக சுவாமி சன்னதி முன்பு யாகம் வளர்த்து, பூஜை முடிந்து சரவண பொய்கை தண்ணீரில் அஸ்தர தேவருக்கு பால், மஞ்சள் பொடி, திரவியப்பொடி உள்பட 16 வகை அபிஷேகம் முடிந்து தீர்த்த உற்ஸவம் நடக்கும். நேற்று மழை பெய்ததால் கோயில் உற்ஸவர் சன்னதியில் அஸ்தர தேவருக்கு தீர்த்த உற்ஸவம் நடந்தது.
மலைக்கு பின்புறம் உள்ள பால் சுனைகண்ட சிவபெருமானுக்கு அபிஷேகம், பூஜை முடிந்து சிறப்பு மலர் அலங்காரமானது.