/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சுகாதார நிலையம் இருக்கு டாக்டர் இல்லையே... குமுறும் மேலுார் மக்கள்
/
சுகாதார நிலையம் இருக்கு டாக்டர் இல்லையே... குமுறும் மேலுார் மக்கள்
சுகாதார நிலையம் இருக்கு டாக்டர் இல்லையே... குமுறும் மேலுார் மக்கள்
சுகாதார நிலையம் இருக்கு டாக்டர் இல்லையே... குமுறும் மேலுார் மக்கள்
ADDED : அக் 31, 2025 01:55 AM

மேலுார்:  மேலுார் சந்தைப்பேட்டை சுகாதார நிலையத்தில் 3 மாதமாக டாக்டர்கள் இல்லாததால் மக்களின்  ஆரோக்கியம் கேள்விக்குறியாகி வருகிறது.
மேலுார் நகராட்சியின் 27 வார்டுகளை சேர்ந்தவர்களுக்கும் 23 ஆண்டுகளாக 6வது வார்டில் ஒரு சுகாதார நிலையமே செயல்பட்டது.
இந்நிலையில் இரண்டு வார்டுகளில் சுகாதார நிலையம் கட்டப்பட்டதால், 25 வார்டுகளை சேர்ந்த மக்கள் இங்கு சிகிச்சை பெற்றனர். சுகாதார நிலையம் ஊரின் மையப்பகுதியிலும், மதுரை - திருச்சி மெயின் ரோட்டில் அமைந்துள்ளதாலும் கர்ப்பிணிகள் சிரமமின்றி சிகிச்சை பெற்றனர். ஆனால் இங்கு 3 மாதங்களாக டாக்டர் இல்லை.
மெஹராஜ் பேகம்: 3 மாதங்களுக்கு முன் இங்கிருந்து மருத்துவ உபகரணங்களை இடமாற்றம் செய்ய முயற்சித்தபோது, 2 கவுன்சிலர்கள் தலைமையில் போராட்டம் நடத்தினோம். மற்ற இரண்டு நிலையங்களை போல் இந்நிலையத்திலும் டாக்டர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்படும் என உறுதி அளித்தனர். ஆனால் இதுவரை டாக்டரை நியமிக்கவில்லை.
அதிகாரியிடம் கேட்டதற்கு மில்கேட் சென்று சிகிச்சை பெற கூறுகின்றனர். 25 வார்டு மக்களும் தொலைவில் உள்ள மில்கேட் சுகாதார நிலையம் செல்ல நேரத்திற்கு பஸ் வசதி இல்லை.  ஆட்டோவில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. பணமும், நேரமும் விரயமாவதால் இங்கு  டாக்டரை நியமிக்க வேண்டும் என்றார்.
வட்டார மருத்துவ அலுவலர் அம்பலம் சிவனேசன் கூறுகையில்,  இங்கு செயல்பட்ட சுகாதார நிலையம் தரம் உயர்த்தப்பட்டு மில்கேட்டில் செயல்படுகிறது. இந்நிலையம் ஒரு செவிலியரைக் கொண்ட துணை சுகாதார நிலையமாக மாற்றப்பட்டுள்ளது என்றார்.

